தமிழகத்தில் எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என, தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் கூறியுள்ளார்.
இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவானது, அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்புப் பொதுத் தேர்வுகள் இன்னும் நடத்தப்படாமல் உள்ளன. மேலும், அடுத்த ஆண்டு கல்லூரிகளுக்கான கால அட்டவணையினை, யூஜிசி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து, நீட் தேர்வு, ஜேஇஇ தேர்வுத் தேதிகளும் அறிவிக்கப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில் தமிழகத்தில் எப்பொழுது கல்லூரிகள் திறக்கப்படும் என, உயர்கல்வித்துறை அமைச்சர் அன்பழகன் பேசினார். அவர் பேசுகையில், தமிழகத்தில் பலக் கல்லூரிகள் கொரோனா சிறப்பு மருத்தவ, தனிமைப்படுத்தும் வார்டுகளாக மாற்றப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில் கல்லூரிகளைத் திறப்பது நல்லதல்ல.
தமிழகத்தில் எப்பொழுது கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்பது உறுதியாகின்றதோ, அப்பொழுது தான் கல்லூரிகள் திறக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.