கடந்த ஆறு நாட்களில் 25 கோடி ரூபாயை வசூல் செய்து, ஜெயம்ரவி நடித்துள்ள கோமாளி திரைப்படம் வசூல் செய்து அசத்தியுள்ளது.
வேல் பிலிம் பேக்டரி தயாரிப்பில், ஜெயம் ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் வெளியா திரைப்படம் கோமாளி. இந்தத் திரைப்படம் வெளியான நாள் முதல் ரசிகர்களிடம், நல்ல வரவேற்பினைப் பெற்று வருகிறது.
குடும்பத்துடன் பார்க்கும் விதத்தில் இப்படம் உள்ளதால், இதனை கூட்டம் கூட்டமாக சென்று திரையறங்கில் பார்த்து ரசிக்கின்றனர். படத்தில், ஜெயம் ரவியும், யோகி பாபுவும் செய்யும் காமெடி காட்சிகளும் ரசிக்கும் விதத்திலேயே உள்ளன. இந்நிலையில், இன்று அப்படக் குழுவினர், அப்படத்தின் வசூல் நிலவரத்தை வெளியிட்டுள்ளனர்.
அதன்படி, படம் வெளியாகி ஆறு நாட்களில் 25 கோடி ரூபாயை வசூல் செய்துள்ளதாக, அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர். இதனை தற்பொழுது ஜெயம் ரவியின் ரசிகர்கள், கொண்டாடி வருகின்றனர்.