கோமாளி திரை விமர்சனம்!

19 August 2019 சினிமா
comalireview.jpg

படம் பார்த்து முடித்ததும், அனைவருடைய முகத்திலும் ஒரு திருப்தியைப் பார்க்க முடிகிறது. அப்படியொரு படத்தை கொடுத்திருக்கிறார் ஜெயம் ரவி. சமீபகாலமாக, தன்னுடையப் படங்களில், சமூகக் கருத்தை கூறும் ரவி இதிலும் கூற நினைத்ததைக் கூறியுள்ளார். படம் முழுக்க சும்மா ஜாலியா என்ஜாய் பண்ணிப் பார்க்கலாம்.

ரேட்டிங் 3.2/5

90ஸ் கிட்ஸ்களுக்கு இப்படம், மிக ஆறுதலான ஒன்று எனக் கூறலாம். படம் அவர்களுக்கு மட்டுமானது அல்ல, அனைவருக்குமானது என்பதையும் கூறிக் கொள்கிறோம். படத்தின் கதை அனைவருக்கும் தெரியும். 16 வருடம் கோமாவில் இருக்கும் ரவி, திடீரென்று கண் விழித்துப் பார்க்கிறார். உலகம் முற்றிலும் மாறியிருக்கிறது.

அதில் எப்படி அவர் வாழ முயற்சிக்கிறார். குடும்பம் என்ன ஆனது. குடும்பப் பிரச்சனையை எப்படி சமாளிக்கிறார்? யோகி பாபுவுக்கும், ஜெயம் ரவிக்கும் என்னத் தொடர்பு என்பது தான் படத்தின் கதை. இது முற்றிலும் வித்தியாசமானக் கதை தான். காரணம், மருத்துவமனையில், நாயகன் இருந்தாலே, படத்தினை சீரியஸாக காட்டுவது தான், நம் தமிழ் சினிமாவின் வழக்கம். அதனை இப்படத்தில், முற்றிலும் உடைத்துப் புதுமைப் படைத்து இருக்கிறார் இயக்குநர் பிரதீப்.

படம் முழுக்க ஜெயம் ரவியுடன் வரும் யோகி பாபு, நம்மை வயிறு வலிக்க சிரிக்க வைக்கிறார். ஜெயம் ரவி கோமாவிற்குச் சென்றதும், அவருடைய தங்கையைத் திருமணம் செய்யும் யோகி பாபு, ரவியையும் பார்த்துக் கொள்கிறார். அந்த சிம்பு படத்தை வச்சு இவங்க செம்மையா செஞ்சிருக்காங்கன்னு சொல்லலாம். படத்தில் பல இடங்களில், இசை கொஞ்சம் போர் அடிக்கிறது. பாடல்கள் கேட்க சுமாராக இருந்தாலும், பார்க்க நன்றாக உள்ளது. படத்தில் ஒரு சில காட்சிகள் கே.எஸ்.ரவிக்குமார் வில்லனாக வந்தாலும், தன்னுடையக் கதாப்பாத்திரத்தை சிறப்பாக செய்துள்ளார்.

மொத்தத்தில் கோமாளி, திறமைசாலி

HOT NEWS