இந்த மாதம், வானில் பச்சனை நிற விண்கல்லைப் பார்க்கலாம் என, விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.
comet c/2018 y1 (iwamoto) என்ற விண்கல்லானது, பல ஆயிரம் ஆண்டுகளாக விண்வெளியில் சுற்றி வருகின்றது. இந்த விண்கல்லானது, பனிக்கட்டி மற்றும் தாதுப் பொருட்களால் நிறைந்தது. அதனால் தான், இந்த விண்கல்லானது, பார்ப்பதற்கு பச்சை நிறத்தில் காட்சியளிக்கின்றது. சுமார் 1,371 ஆண்டுகளாக சூரிய பாதையில் இருந்து, பூமியின் பகுதியில் சுற்றிக் கொண்டிருக்கும் இந்த விண்கல்லினை, மஸாயுக்கி இவாமோட்டா என்பவர் முதன் முதலாக கண்டுபிடித்தார்.
இந்த விண்கல்லினை, டெலஸ்கோப் மூலமோ அல்லது பைனாக்குலர் மூலமோ, வானில் தெளிவாகக் காண இயலும். இந்த விண்கல்லானது, நிலவிற்கும் நம்முடைய புவிக்கும் உள்ள தூரத்தினைப் போன்று 118 மடங்கு தொலைவில் காட்சித் தரும். அதாவது 45 மில்லியன் கிலோ மீட்டர்கள் (2.5 ஒளி நிமிடங்கள்) தொலைவில் இது காட்சித் தர உள்ளது.
இந்த விண்கல்லானது, மணிக்கு 238,000 கிலோமீட்டர் வேகத்தில் பயணித்துக் கொண்டு இருக்கின்றது. மேலும், இந்த விண்கல்லானது, எப்பொழுது அழியும் என யாருக்கும் தெரியாது. இதனால், இதனை நீண்ட காலத்திற்கு காண இயலாது எனவும் விஞ்ஞானிகள் கருதுகின்றனர். தற்பொழுது சூரியனைத் தாண்டி வந்திருக்கும் இந்த கல்லானது, புவியின் பார்வைக்கு தெரிய வந்துள்ளது.
இதன் வேகத்தினைப் பார்க்கும் பொழுது, இன்னும் ஓரிரு வாரத்தில் இந்த கல்லானது, புளூட்டோவினை எளிதாக தாண்டிச் சென்றுவிடும். பின்னர், இந்த விண்கல்லானது, மீண்டும் நம்முடைய இண்டர்ஸ்டெல்லாருக்குள் வருவதற்கு, 3390வது ஆண்டு ஆகும் எனக் கணிக்கப்பட்டுள்ளது.