முதல் தனியார் ரயிலில் கட்டணக் கொள்ளை! ஐஆர்சிடிசி திடீர் எச்சரிக்கை!

14 October 2019 அரசியல்
tejasexpress.jpg

விதிகளை மீறி, அதிக கட்டணம் வசூலித்துள்ளதாக, இந்தியாவின் முதல் தனியார் ரயிலிற்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 4ம் தேதி, லக்னோவில் இருந்து டெல்லிக்கு, அதிவிரைவு தனியார் ரயில் ஓட ஆரம்பித்தது. இந்த ரயில் ஓட ஆரம்பித்ததில் இருந்து, பயணிகள் அனைவருமே, மகிழ்ச்சியாக அதில் பயணிக்கின்றனர். முழுவதும் குளிரூட்டப்பட்ட அந்த ரயில், லக்னோவில் இருந்து, சுமார் 6 மணி நேரம் 30 நிமிடத்தில், டெல்லிக்கு சென்று விடுகின்றது. இந்த ரயிலில் குளிரூட்டப்பட்ட எக்ஸ்சிக்யூட்டிவ் கிளாஸ் மற்றும் குளிரூட்டப்பட்ட சேர் என இரு பிரிவுகள் உள்ளன.

ஏசி எக்ஸ்சிக்யூட்டிவ் கிளாஸ் பிரிவிற்கு, சுமார் 2450 ரூபாய் கட்டணமும், ஏசி சேர் கார் பிரிவிற்கு சுமார், 1565 ரூபாய் கட்டணமும் வசூலிக்கப்படுகின்றன. இந்த ரயில், காசியாபாத் நிறுத்தத்தில் இரண்டு நிமிடமும், கான்பூர் ரயில் நிறுத்தத்தில் ஐந்து நிமிடமும் நிறுத்தப்படுகின்றது. இடையில் வேறு எங்கும் நிறுத்தப்படுவது இல்லை.

அதே போல், அந்த ரூட்டில் சதாப்தி எக்ஸ்பிரஸ்ம் இயங்கி வருகின்றது. இதுவும், சுமார் 6 மணி 35 நிமிடத்தில் டெல்லியை அடைகின்றது. இடையில் ஐந்து இடங்களில் இந்த ரயில் நிறுத்தப்படுகின்றது. இதில் ஏசி எக்ஸ்சிக்யூட்டிவ் கிளாசிற்கு 1855 ரூபாயும், ஏசி சேர் கார் பிரிவிற்கு 1165 ரூபாயும் கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. அதே சமயம், சுகைல்தேவ் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் மற்றும் கரிப் ரத் எக்ஸ்பிரஸ் ஆகியவைகளில் முறையே, 645 மற்றும் 480 ரூபாய் வசூலிக்கப்படுகின்றது.

இந்திய ரயில்வே விதிகளில், இரண்டு விதிகளை தனியார் ரயில் மீறி, அதிக கட்டணத்தை வசூலித்துள்ளதாகப் புகார் எழுந்துள்ளது. மேலும், இதற்கு விளக்கம் கேட்கப்டும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS