எதிர்கட்சிகள் கூட்டம்! மம்மதா, மயாவதி, திமுக, சிவசேனா புறக்கணிப்பு!

14 January 2020 அரசியல்
rahulgandhioncaa.jpg

யாருமே வராதக் கூட்டத்தை, யாருக்காகப்பா நடத்துரீங்கன்னு கேட்கும் அளவிற்கு நடந்து முடிந்துள்ளது காங்கிரஸ் நடத்தியக் கூட்டம்.

நேற்று, என்ஆர்சி, சிஏஏ சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, காங்கிரஸ் தலைமையில் அனைத்து எதிர்கட்சிகளின் கூட்டம் நடைபெற்றது. இதில், காங்கிரஸ் கட்சி உட்பட சுமார் 20 கட்சிகள் கலந்து கொண்டதாக, ராகுல் காந்தி தெரிவித்தார். தங்களுடைய முதல்வர்களுக்கு இந்த சட்டத்தினை, தங்களுடைய மாநிலங்களில் நிறைவேற்ற வேண்டாம் எனவும், உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதுவரை, மொத்தம் இரண்டு மாநிலங்களில் மட்டுமே, சிஏஏ மற்றும் என்ஆர்சி சட்டத்தினை ஏற்க முடியாது என்ற மசோதா நிறைவேற்றபட்டுள்ளது. கேரளா மற்றும் மேற்கு வங்கத்தினைத் தவிர்த்து, மற்ற எந்த மாநிலத்திலும் இந்த சட்டத்திற்கு எதிரான தீர்மானம் கொண்டு வரப்படவில்லை.

பாஜக ஆட்சி அல்லாத பிற மாநிலங்களில், இந்த சட்டத்தினை அமல்படுத்த வேண்டாம் எனவும், காங்கிரஸ் தரப்பில் கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது. இந்த சட்டத்தினால், ஏழை எளிய மக்கள், எஸ்சி, எஸ்டி பிரிவினர், மைனாரிட்டி பிரிவினர் வெகுவாக பாதிக்கப்படுவர் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2010ம் ஆண்டு, காங்கிரஸ் கட்சி தான் இந்த தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தினை அமல்படுத்த வேண்டும் எனக் கூறியது. ஆனால் அதனை எதிர்கட்சியான பாஜக கடுமையாக எதிர்த்தது. இந்நிலையில், பாஜக தற்பொழுது இந்த சட்டத்தினை கொண்டு வந்துள்ளது. இதனை, காங்கிரஸ் எதிர்த்து வருகின்றது.

HOT NEWS