பேஸ்புக்கிற்கு காங்கிரஸ் கடிதம்! மதப் பேச்சிற்கு பேஸ்புக் துணை போகின்றதா?

19 August 2020 அரசியல்
rahul.jpg

பேஸ்புக் நிறுவனத்திற்கு தற்பொழுது காங்கிரஸ் கட்சியானது, கடிதம் ஒன்றினை எழுதி உள்ளது.

இந்தியாவில் பாஜக மற்றும் வலதுசாரி கட்சிகள் பேஸ்புக்கில் மத வெறுப்புணர்வினைத் தூண்டும் விதமாகவும், போலியான மற்றும் பொய்யான செய்திகளை பரப்பி வருவதாகவும், காங்கிரஸ் கட்சியின் முக்கியத் தலைவர்களுள் ஒருவரான, ராகுல் காந்தி பரபரப்புக் குற்றம் சாட்டினார்.

மேலும், பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப் நிறுவனங்கள், ஆளும் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பிற்கு துணை போகின்றன எனவும் கூறியிருந்தார். இது குறித்து அமெரிக்க செய்தி பத்திரிகைய்யான வால்ஸ்ட்ரீட் ஜோர்னல் பத்திரிக்கை செய்தி வெளியிட்டு இருப்பதை சுட்டிக் காட்டினார்.

இது பெரும் சர்ச்சையினை உருவாக்கியது. இந்த சூழ்நிலையில், தற்பொழுது காங்கிரஸ் கட்சியின் சார்பில் கடிதம் ஒன்று பேஸ்புக் நிறுவனத்திற்கு எழுதப்பட்டு உள்ளது. அதில், பல்வேறு கஷ்டங்கள் மற்றும் போராட்டங்களுக்குப் பிறகு, இந்தியாவிற்கு காங்கிரஸ் கட்சி சுதந்திரம் வாங்கித் தந்தது. அதனை, சில எளிய விஷயங்கள் மூலம் சீரழிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.

பேஸ்புக் நிறுவனம் இது குறித்து, இரண்டு வாரங்களுக்குள் தீவிர விசாரணை நடத்த வேண்டும். இந்தியர்கள் அனைவரும் இது குறித்துக் கேள்வி எழுப்ப வேண்டும் எனவும், போலி செய்திகள் மூலம் நாம் பெற்ற சுதந்திரத்தினை இழக்கக் கூடாது. கடந்த 2014ம் ஆண்டு முதல், பேஸ்புக்கில் பகிரப்பட்டு உள்ள, வெறுப்பினை உமிழும் பதிவுகள் குறித்த தகவல்களை, பேஸ்புக் நிறுவனம் தர வேண்டும் என்று அக்கடிதத்தில் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS