டிவிட்டரில் டிரெண்டிங்காகும் மோடி அணிந்த கண்ணாடி! ஏன் தெரியுமா?

26 December 2019 அரசியல்
modieclipse.jpg

இன்று காலையில், தன்னால் சூரிய கிரகணத்தினை நேரடியாகக் காண இயலவில்லை என, பிரதமர் மோடி டிவீட் செய்தார். அவ்வளவு தான்! அவர் பெயர் உலகளவில் டிவிட்டரில் டிரெண்டிங் செய்யப்பட்டுவிட்டது.

அவருடையப் பதிவில் ஒரு கண்ணாடி அணிந்திருந்தார். அந்தக் கண்ணாடியினைப் பற்றி தற்பொழுது பல திடுக்கிடும் சுவாரஸ்யமான தகவல்கள் வெளியாகி உள்ளன. மேபேட்ஜ் என்ற பிரபல நிறுவனம் தயாரிக்கும் கண்ணாடியினைத் தான் அவர் அணிந்துள்ளார் எனப் பலரும் தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க ஆரம்பித்து விட்டனர்.

அந்த கண்ணாடியினைத் தயாரிக்கும் நிறுவனம், ஜெர்மனியில் அமைந்துள்ளது. அந்த கண்ணாடியின் பிரேமானது டைட்டானியம் அல்லது மரம் அல்லது உயர் ரகப் பொருளால் உருவாக்கப்படும். தரமான லென்ஸானது அதில் பயன்படுத்தப்படும். இந்தக் கண்ணாடியின் விலை சுமார், 1,50,000 ரூபாய் என, டிவிட்டரில் பதிவுகள் உலா வர ஆரம்பித்தன.

அவ்வளவு தான்! தற்பொழுது இது குறித்து பல மீம்ஸ்கள், போட்டோக்கள் வெளியாக ஆரம்பித்து விட்டன. தற்பொழுது #CoolestPM என்ற ஹேஸ்டேக்கானது டிராண்டாகி வருகின்றது.

HOT NEWS