ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்தது! சீனா மறுப்பு!

10 June 2020 அரசியல்
coronavirusdelhi.jpg

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதமே, இந்த கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்து விட்டது என, இங்கிலாந்து நாட்டினைச் சேர்ந்த ஹார்வர்ட் மருத்துவப் பள்ளிக் கூறியுள்ளது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்துள்ளது. இதனால், தற்பொழுது வரை உலகம் முழுக்க 70 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான்கு லட்சத்திற்கும் அதிகமானோர் மரணமடைந்து உள்ளனர். இந்த வைரஸானது, சீனாவில் இருந்து தான் பரவ ஆரம்பித்து இருப்பதை சீனாவும் ஏற்றுக் கொண்டது.

இந்த சூழ்நிலையில், சீனா பொய் கூறி இருப்பதாக இங்கிலாந்து நாட்டின் ஹார்வர்ட் மருத்துவப் பள்ளி அறிவித்துள்ளது. இதற்காக, கடந்த ஆண்டின் செயற்கைக்கோள் புகைப்படங்களையும், தரவுகளையும் பயன்படுத்தி இந்த முடிவினைத் தெரிவித்துள்ளது. சீனாவின் மருத்துவமனைகளில் வழக்கத்தை விட, அதிகளவில் ஆகஸ்ட் மாதத்திற்குப் பிறகு பல வாகனங்கள், நோயாளிகள் வந்து சென்றிருப்பதைக் கண்டுபிடித்து உள்ளது.

மேலும், அங்குள்ள மருத்துவமனைக் கார்பார்க்கிங்குகளில் அதிகளவில் வாகனங்கள் வந்து சென்றுள்ளன. அதே போல், ஆகஸ்ட் மாதத்தில் வயிற்றுப் போக்குக் காரணமாக, மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளதாகவும் கண்டுபிடித்துள்ளனர். இதனால், ஆகஸ்ட் மாதத்தில் இருந்தே இந்த வைரஸ் பரவி இருக்க வாய்ப்பிருப்பதாக கூறியுள்ளது.

இதனை, சீனா மறுத்துள்ளது. இது மிகவும் அபத்தமானத் தகவல் எனவும், இது முற்றிலும் ஆதாரமற்றது எனவும் கூறியுள்ளது. தேவையற்ற வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளது.

HOT NEWS