கொரோனா மருந்து வெற்றி! ரஷ்ய விஞ்ஞானிகள் அபார சாதனை!

13 July 2020 அரசியல்
coronaisrael.jpg

ரஷ்யாவில் உருவாக்கியுள்ள கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தானது, தற்பொழுது வெற்றிப் பெற்று உள்ளது.

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் உள்ள செச்சனோவ் அரசு மருத்துவப் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், புதிய அறிவிப்பினை வெளியிட்டு உள்ளனர். அதில், தற்பொழுது உருவாக்கப்பட்டு உள்ள கொரோனா மருந்தானது, மிகவும் பாதுகாப்பானது என்றுக் கூறியுள்ளனர். இந்த மருந்தானது, ரஷ்யாவில் உள்ள இன்ஸ்ட்டியூட் ஆஃப் எபிடெமாலஜி அண்ட் மைக்ரோபயலாஜியை சேர்ந்த விஞ்ஞானிகள், இந்த மருந்தினை உருவாக்கினர்.

இந்த மருந்தினை, செச்னோவ் பல்கலைக் கழக ஆய்வாளர்கள் தன்னார்வலக் குழுவினர் மீது சோதனை செய்தனர். இந்த சோதனையில், இந்த மருந்தானது மிகவும் பாதுகாப்பானது என்றுத் தெரிய வந்துள்ளது. இது குறித்து பேசியுள்ள விஞ்ஞானிகள், நாங்கள் இந்த மருந்தினை தன்னார்வலர்கள் மீது சோதனை செய்தோம். அதில் இந்த மருந்தானது, மிகவும் பாதுகாப்பானது எனக் கண்டுபிடித்துள்ளோம்.

இந்த மருந்தின் இரண்டு கட்டப் பரிசோதனைகளும் தற்பொழுது முடிவிற்கு வரும் நிலையில் உள்ளன. இதன் விளைவுகள் மற்றும் முடிவுகள் குறித்து, எவ்விதத் தகவலையும் அவர்கள் தெரிவிக்கவில்லை. ஆனால், இதற்காக முன்வந்த தன்னார்வலர்களில் முதற்குழுவினர் வருகின்ற ஜூலை 15ம் தேதியும், இரண்டாம் குழுவினர் ஜூலை 20ம் தேதியும் வீடு திரும்புகின்றனர். அவர்களின் உடல்நிலையின் பொறுத்து, 2வது கட்ட ஆய்வு நடைபெறும்.

பின்னர், இதனை சர்வதேசத் தரத்திற்கு மாற்றியப் பின்னர், உலகம் முழுக்க விநியோகம் செய்வர். இந்த மருந்து சரியாக எவ்விதப் பாதிப்பும் மற்றும் பக்க விளைவுகளை ஏற்படுத்தாமல் செயல்பட்டு விட்டால், கண்டிப்பாக வருகின்ற அக்டோபர் மாதத்திற்குள், உலகிலுள்ள அனைத்து நாடுகளுக்கும், இந்த தடுப்பு மருந்தானது வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

HOT NEWS