துபாக்கு பறந்த கொரோனா வைரஸ்! அலறும் அமீரகம்!

29 January 2020 அரசியல்
coronavirus11.jpg

ஐக்கிய அரபு அமீரகத்திற்கு, தற்பொழுது கொரோனா வைரஸ் பரவியுள்ளது. உலக முழுவதையும் தற்பொழுது அச்சுறுத்தும் நோயாக கொரோனா வைரஸ் பரவி வருகின்றது. இந்த வைரஸால் கிட்டத்தட்ட 13,000 தற்பொழுது வரை பாதிக்கப்பட்டு வருகின்றனர். மேலும், பாதிக்கப்பட்டவர்களில், 1,500க்கும் மேற்பட்டோர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

சீனாவில், இந்த வைரஸால் கிட்டத்தட்ட 132 பேர் மரணமடைந்துள்ளனர். இந்த கொரோனா வைரஸ் காரணமாக, இந்தியா உள்ளிட்ட அனைத்து நாடுகளிலும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தாய்லாந்து, ஜப்பான், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், இந்த வைரஸ் பரவியிருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்பொழுது இந்த வைரஸானது, ஐக்கிய அரபு அமீரகத்திலும் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது.

இந்த வைரஸ் பாதிப்பினை உடைய சீனக் குடும்பத்தினர், அமீரகம் வந்ததாகவும், அவர்களுக்கு இந்த கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டு இருப்பதை தொடர்ந்து, அவர்களைத் தனிமைப்படுத்தி தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அந்நாட்டு அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

HOT NEWS