கொரனோ வைரஸ் எதிரொலி! சிகிச்சை அளித்தவர்களும் பலி! கதறும் குடும்பத்தினர்! நடனமாடும் மருத்துவர்கள்!

15 February 2020 அரசியல்
coronavirus121.jpg

தற்பொழுது வரை, கொரோனா வைரஸ் காரணமாக, சீனா மற்றும் உலக நாடுகள் அனைத்தையும் சேர்த்து 1,500 பேர் பரிதாபமாக மரணமடைந்துள்ளனர். மேலும், 65,000 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், சீனாவில் மட்டும், 10,000 பேர் தற்பொழுது தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.

அங்குள்ள அனைத்து மருத்துவமனைகளும் நிரம்பி வருகின்றன. நோயாளிகளைத் தங்க வைக்க, அவசர காலத்திற்காக, தற்காலிக மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இதுவரை, இந்த கொரோனா வைரஸ்க்கு மருந்து கண்டுபிடிக்கப்படவில்லை. இதனால், பலி எண்ணிக்கை இன்னும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ஹூபேய் மாகாணத்தில் உள்ள ஊஹாண் நகரில் தான் இந்த வைரஸ் முதன் முதலாக பரவ ஆரம்பித்தது. அங்குள்ள பொதுமக்கள், பொது இடங்களில் நடமாட தடை விதிக்கப்பட்டு உள்ளது. அவர்கள் வீடுகளுக்குள்ளேயே, அடங்கி கிடக்கின்றனர். அங்குள்ள நோயாளிகளுக்கு, போதிய மருத்துவ வசதி அளிக்க இயலாத காரணத்தினால், டிவி, தொலைபேசி, ரேடியோ உள்ளிட்டவைகள் மூலம், மருத்துவ வசதிகள் அளிக்கபட்டு வருகின்றன.

இந்நிலையில், அங்கு உள்ள நோயாளிகளுக்கு மருத்துவ வசதி அளிக்கும் மருத்துவர்கள் ஆறு பேர், மரணமடைந்து உள்ளதாக சீன அரசாங்கம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும், சிகிச்சை அளிப்பவர்களில் 1,716 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர் எனவும், சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த நோய்க்கு, தாய்லாந்து, ஆஸ்திரேலியாவினைச் சேர்ந்த விஞ்ஞானிகள் மருந்துக் கண்டுபிடித்துவிட்டதாக கூறியிருக்கின்ற போதிலும், அவைகள் இன்னும் அதிகாரப்பூர்வ மருந்துகளாக அறிவிக்கப்படவில்லை.

இதனிடையே, மருத்துவமனைகளில் அடங்கி கிடக்கும் நோயாளிகளுடன், அங்கு பணிபுரியும் மருத்துவ அதிகாரிகளும், மருத்துவர்களும் நடனமாடி மகிழ்விக்கின்றனர். அவ்வாறு செய்வதன் மூலம், அவர்களுடைய மனமும், உடலும் புத்துணர்ச்சி அடையும் எனவும், இதனால் உடலில் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் எனவும் நம்புகின்றனர்.

HOT NEWS