அவசரப் பிரிவில் 1000 பேர்! சீனாவைப் புறட்டிப் போட்ட கொரோனா! 13,000 பாதிப்பு!

27 January 2020 அரசியல்
coronavirus1.jpg

சீனாவில் கொரோனா வைரஸ் தாக்குதல் காரணமாக, தற்பொழுது வரை 135 பேர் பலியாகி உள்ளனர். மேலும், 1000 கவலைக்கிடமாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

சீனாவில் ஊஹான் நகரத்தில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து, மிருகங்கள் மூலம் இந்த கொரோனா வைரஸ், மனிதர்களுக்குப் பரவி இருப்பது கண்டறியப்பட்டது. இதனையடுத்து, தொடர்ந்து இந்த வைரஸானது காட்டுத் தீ போல உலகம் முழுவதும் பரவி வருகின்றது. தற்பொழுது வரை, இந்த கொரோனா வைரஸால் சுராம் 135 பலியாகி இருப்பதாக, சீன அரசாங்கம் தெரிவித்துள்ளது. கூட்டம் கூட்டமாக யாரும் சுற்ற வேண்டாம் எனவும், அந்நாட்டு அரசாங்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

தற்பொழுது வரை சீனாவில் 13,000 பேருக்கும் அதிகமானோர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும், அதில் 1000 பேரின் நிலைமை மிக மோசமாக இருப்பதாகவும், சீனாவினைச் சேர்ந்த செய்தி ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மேலும், பலர் இந்த வைரஸ் தொற்றுக் காரணமாக, இறக்கும் அபாயம் இருப்பதாகவும் அதிர்ச்சிகரமானத் தகவல்கள் பரவி வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, இரண்டு தற்காலிக மருத்துவமனைகளை, சீன அரசாங்கம் உருவாக்கி வருகின்றது. சுமார், 1000 பேருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கும் விதத்தில், இரண்டு மருத்துவமனைகளும் உருவாக்கப்பட்டு வருகின்றன. இந்தியா உட்பட, உலக நாடுகள் அனைத்திலும், இந்த வைரஸானது மிகத் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றது.

HOT NEWS