வேகமாகப் பரவும் கொரோனா வைரஸ்! சீனாவில் மட்டும் 80 பேர் பலி!

27 January 2020 அரசியல்
coronavirus1.jpg

சீன மக்கள் புத்தாண்டினைக் கொண்டாடிக் கொண்டிருக்க வேண்டிய நிலையில், தற்பொழுது மௌன அஞலி செலுத்திக் கொண்டு இருக்கின்றனர். தற்பொழுது வரை, வேகமாகப் பரவி வரும் கொரோனா வைரஸால் 80 பேர் வரை பலியாகி இருப்பதாக சீன செய்தி நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.

கடந்த ஆண்டின் இறுதியில், சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கொரோனா வைரஸ் பரவி வருவது கண்டறியப்பட்டது. இதனால், ஊஹான் பகுதிக்குள் பொதுமக்கள் புதிதாக நுழையத் தடை விதித்து சீன அரசு. மேலும், ஊஹான் பகுதியில் இருப்பவர்கள் வெளியேறவும் தடை விதித்தது. இதனிடையே, இவைகளை எல்லாம் மீறி, இந்த வைரஸானது தற்பொழுது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, தாய்லாந்து, வியட்நாம், சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்குப் பரவி உள்ளது.

இந்த வைரஸால் பாதிக்கப்பட்டவர்களில், 34% பேர் மரணமடைந்து உள்ளனர். இதுவரை, 2,700க்கும் மேற்பட்டோர் இந்த வைரஸால் சீனாவில் மட்டும் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்கள் எனவும், இந்த எண்ணிக்கை அதிகரிக்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளது எனவும் கணிக்கப்பட்டு உள்ளது. தற்பொழுது வரை, இந்த கொரோனா வைரஸால் 80 பேர் உயிரிழந்துள்ளனர். எனவும், பலர் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS