ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு பரவும் தன்மை உள்ளது இந்த கொரோனா!

27 January 2020 அரசியல்
virus.jpg

சீனாவில் இருந்து, உலகம் முழுவதும் பரவி வரும் இந்த கொரோனா வைரஸானது, ஒரு மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்குப் பரவும் தன்மையுடையது என, ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.

ஜெர்மனி, ஜப்பான் போன்ற நாடுகளுக்கும் தற்பொழுது கொரோனா வைரஸ் பரவி உள்ளது. இதனால், அந்நாட்டு அரசாங்கங்களும், சுகாதார அமைப்புகளும் முழு வீச்சில் செயலாற்றி வருகின்றன. அந்நாட்டு விஞ்ஞானிகள் இந்த கொரோனா வைரஸினைப் பற்றி, தீவிர ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த வைரஸ் எப்படி மனிதர்களிடம் பரவுகின்றது எனவும், இந்த வைரஸைக் கட்டுப்படுத்துவதற்கான மருந்து பற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த நிலைமையில், இந்த வைரஸானது மனிதர்களிடம் ஓட்டிக் கொண்டு, பரவும் தன்மையுடையது எனக் கண்டுபிடித்து உறுதி செய்துள்ளனர். இருப்பினும், இது உடலில் முதலில் எங்கு தாக்குகின்றது என்பது பற்றிய அதிகாரப்பூர்வத் தகவல் வெளியாகவில்லை. ஆனால், நுரையீரலையே இந்த வைரஸானது தாக்கும் என, சீனாவின் சுகாதார அமைப்புக் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

HOT NEWS