வெளிநாடுகளில் இருந்து தான், கொரோனா வைரஸ் உள்ளதைக் கண்டுபிடிக்கும் கருவியானது இறக்குமதி செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால், இந்திய அரசாங்கத்திற்கு பெரிய அளவில் செலவு ஏற்படுகின்றது.
இதற்கிடையே, புனேவில் உள்ள தனியார் மருந்துவ பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனமானது, புதியதாக கொரோனா வைரஸ் இருப்பதை கண்டுபிடிக்கும் கருவியினை உருவாக்கியுள்ளது.
இதற்கு, இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கவுன்சில் அங்கீகாரம் வழங்கியுள்ளது. இதனை புனேவின் மைலேப் டிஸ்கவரி சொல்யூசன் என்ற நிறுவனம் உருவாக்கியிருக்கின்றது. இதன் விலையானது, 80,000 ரூபாய் ஆகும். இந்த கருவியினைப் பயன்படுத்தி 100 பேருக்கு பரிசோதனை செய்ய இயலும். இதன் விலையானது, வெளிநாடுகளில் இருந்து வாங்கப்படும் கருவியினை விட, நான்கு மடங்கு குறைவாகும்.
இந்தக் கருவிக்கு தற்பொழுது இந்திய அரசு அங்கீகாரம் அளித்துள்ளதால், விரைவில் அடுத்த ஒரு வாரத்திற்குள் ஒரு லட்சம் கருவிகளை உருவாக்க, அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது என அந்நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.