கொரோனா பெயரில் நிவாரண நிதி மோசடி! பொதுமக்கள் உஷார்!

05 April 2020 அரசியல்
pmcaresfund.jpg

இந்தியாவில் பரவி வரும் கொரோனா வைரஸினைத் தடுக்கும் பொருட்டு, தங்களால் இயன்ற பண உதவியினை செய்யுமாறு, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்தார்.

அப்பொழுது முதல் குழந்தைகள் முதல், பெரிய முதலாளிகள் வரை தங்களால் இயன்ற பண உதவிகளை மோடி வெளியிட்ட வங்கிக் கணக்கிற்கு அளித்து வருகின்றனர். அதே போல், அனைத்து மாநில முதல்வர்களும் தங்களுடைய நிவாரண வங்கிக் கணக்குகள் பற்றிய தகவல்களை வெளியிட்டுள்ளனர். தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியும் நிவாரண நிதிக்குரிய வங்கிக் கணக்கின் தகவலை வெளியிட்டுள்ளார்.

இந்நிலையில், பொதுமக்களும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர். குழந்தைகள் முதல் மூத்த குடிமக்கள் வரை, பலரும் தாங்கள் சேமித்து வைத்திருந்த பணத்தினை தாராளமாக வழங்கி வருகின்றனர். தமிழ் நடிகர்களும் தங்களால் இயன்ற உதவியினை செய்து வருகின்றனர். பொதுமக்கள் பலரும் தங்களால் முடிந்த உதவிகளை, நேரடியாக மற்றவர்களுக்காக செய்து வருகின்றனர். வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கும், தங்களுடைய உதவிகளை செய்து வருகின்றனர்.

இதனிடையே, ஒரு சிலர் தங்களுடைய கை வரிசைகளையும் காட்டி வருகின்றனர். பலர் போலியான கணக்குகள் மூலமும், பொய்யான கணக்குகள் மூலமும், மோடி பெயரிலும், முதல்வர் பெயரிலும் பணம் சம்பாதித்து வருகின்றனர். இது குறித்து போலீசாரும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பணம் வழங்க விரும்பும் பொதுமக்கள், சரியான வங்கிக் கணக்கிற்கு செலுத்துமாறு அறிவுறுதப்பட்டு உள்ளது.

HOT NEWS