கொரோனா வைரஸ் பாதிப்புக் குறைய ஆரம்பித்தது! விவரம் இதோ!

13 March 2020 அரசியல்
coronavirusncov.jpg

உலகம் முழுக்க அச்சுறுத்தும் விஷயமாக கொரோனா வைரஸ் உள்ளது. இதனால், உலகப் பொருளாதாரமே பாதிக்கப்பட்டு உள்ளது.

இதுவரை, சீனாவில் மட்டும் 3,500க்கும் மேற்பட்டோர் மரணமடைந்து உள்ளனர். உலகின் சுமார் 110க்கும் அதிகமான நாடுகளில், இந்த வைரஸானது பரவி உள்ளது. இந்த வைரஸினை, மிகத் தீவிரமான தொற்று நோயாக, உலக சுகாதார நிறுவனம் அறிவித்தது. மேலும், இதற்கு கோவிட்-19 எனவும் பெயர் வைத்தது. இந்த கோவிட்-19 காரணமாக, இதுவரை 5,000 பேர் மரணமடைந்துள்ளனர்.

சீனாவின் ஊஹான் நகரில் இருந்து பரவ ஆரம்பித்த இந்த நோயால், இத்தாலி, ஈரான், தென் கொரியா உள்ளிட்ட நாடுகள் சீனாவினைத் தொடர்ந்து கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளன. இத்தாலியில், தற்பொழுது இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்நிலையில், மனதிற்கு ஆறுதல் தரும் விஷயம் ஒன்றும் வெளியாகி உள்ளது.

சீனாவில் தான் இந்த வைரஸானது கடுமையாகப் பரவி வருகின்றது. இந்த நிலையில், மூன்று இலக்க எண்ணிக்கையில் பாதிப்பு இருப்பவர்கள் கண்டறியப்பட்டு வந்தனர். ஆனால், நேற்று வெறும் ஒற்றை இலக்க அளவிலேயே, பாதிக்கப்பட்டவர்கள் கண்டறியப்பட்டு உள்ளனர். நேற்று ஐந்து பேர் மட்டும் இந்த வைரஸ் தொற்று இருப்பவர்களாக, அடையாளம் காணப்பட்டு உள்ளனர்.

இதனால், சீன அரசாங்கம் சற்று நிம்மதி அடைந்துள்ளது. சீனாவின் சிறப்பான கண்காணிப்பு மற்றும் மருத்துவ முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் காரணமாகவே, இந்த வைரஸ் தொற்றின் வேகம் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது என, உலக சுகாதார மையம் மகிழ்ச்சி தெரிவித்துள்ளது.

இந்த வைரஸ் தொற்றின் காரணமாக, உலகளவில் பல போட்டிகள், கலை நிகழ்ச்சிகள், பொதுக்கூட்டங்கள் மறு தேதிக் குறிப்பிடப்படாமல் ஒத்தி வைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் நடைபெற இருந்த, ஐபிஎல்13வது சீசன் போட்டிகளும், மறு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன.

HOT NEWS