மலேசியாவில் கொரோனா வைரஸின் 3வது அலை! மீண்டும் அமல்படுத்தப்பட்டது ஊரடங்கு!

09 November 2020 அரசியல்
coronaquarantine.jpg

மலேசியாவில் கொரோனா வைரஸின் 3வது அலைப் பரவியிருப்பதால், அங்கு கடுமையான ஊரடங்கானது அமல்படுதப்பட்டு உள்ளது.

உலகம் முழுவதும் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் அமைந்துள்ள ஊஹான் பகுதியில் இருந்து கொரோனா வைரஸானது பரவியது. தற்பொழுது வரை நான்கே முக்கால் கோடிக்கும் அதிகமானோர், இந்தக் கொரோனா வைரஸால் பலியாகி உள்ளனர். இந்த சூழ்நிலையில், பல நாடுகளில் பொருளாதார பிரச்சனை எழுந்தது.

அதனை சமாளிக்கும் பொருட்டு, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது தற்பொழுது அமல்படுத்தப்பட்டு உள்ளது. ஆசிய நாடான மலேசியாவில், முதலில் கொரோனா வைரஸானது கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழலில் மீண்டும் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததால், அதிக தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டது. இந்த சூழலில், கொரோனா பரவும் வேகம் குறைந்தது. இந்நிலையில், சபா மாநிலத்தில் மீண்டும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவ ஆரம்பித்து உள்ளது.

இதனால், மலேசிய அளவில் நாடு தழுவிய கடுமையான ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது. இது குறித்து பேசியுள்ள மலேசிய சுகாதாரத்துறை அதிகாரிகள், தற்பொழுது மலேசியாவில் கொரோனா வைரஸின் 3வது அலை வீசுவதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காகப் பல்வேறுக் கட்ட நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறுகின்றனர். இந்த 3வது கட்ட கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கொலாலம்பூர், சபா, கெடா, பிணாங்கு, பேராக், நெகிரி, புத்ர ஜெயா, சிலாங்கூர், செம்பியான், மலாக்கா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கடுமையான ஊரடங்கானது அமல்படுத்தப்பட்டு உள்ளது.

பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட மக்கள் கூடும் இடங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளன. ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டத்திற்குச் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. அத்தியாவசியப் பொருட்களை வாங்குவதற்கு, ஒரு குடும்பத்தில் இருவருக்கும் மேல் செல்லக் கூடாது என்றுக் கூறப்பட்டு உள்ளது.

HOT NEWS