பிரேசிலில் இருந்து வந்த சிக்கனில் கொரோனா! சீனா பகிரங்க அறிவிப்பு!

14 August 2020 அரசியல்
chickenpiece.jpg

பிரேசிலில் இருந்து சீனாவிற்கு வந்த சிக்கன் கறியில், கொரோனா வைரஸ் தொற்று இருப்பதைக் கண்டறிந்து உள்ளதாக சீனா பகிரங்கமாக அறிவித்து உள்ளது.

உலகளவில் கொரோனா வைரஸானது, நாளுக்கு நாள் வேகமாகப் பரவி வருகின்றது. தற்பொழுது வரை சுமார் 2 கோடி பேருக்கு, கொரோனா வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் உலகின் பல முன்னணி நாடுகள் ஈடுபட்டு உள்ளன. இந்நிலையில், உலக சுகாதார மையம், இந்த கொரோனா வைரஸ் குறித்து அறிவிப்புகள் மற்றும் அறிகுறிகள் பற்றி தினமும் பேசி வருகின்றது.

அதனடிப்படையில் பல நாடுகள் தற்பொழுது வெளிநாடுகளில் இருந்து, உள்நாட்டுக்கு வருகின்ற பொருட்களை தீவிரமாக சோதனை செய்து வருகின்றன. கொரோனா வைரஸ் பிறப்பிடமாகக் கருதப்படும் சீனாவில், தற்பொழுது புதிய கண்டெய்னர் ஒன்று சோதிக்கப்பட்டது. இது பிரேசிலில் உள்ள தனியார் இறைச்சி ஏற்றுமதி செய்யும் நிறுவனத்திடம் இருந்து வந்துள்ளது.

இந்த இறைச்சியில் கொரோனா வைரஸ் தொற்று இருப்பதை, சீன ஆய்வாளர்கள் கண்டறிந்து உள்ளனர். இதனைத் தொடர்ந்து, அந்த இறைச்சியானது சோதிக்கப்பட்டு பின்னர், அதனை அங்கிருந்து பாதுகாப்பான இடத்திற்கு எடுத்துச் சென்று அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு உள்ளனர்.

HOT NEWS