பிரேசிலில் மண்ணில் வரிசையாகப் புதைக்கப்படும் பிணங்கள்!

24 April 2020 அரசியல்
brazilcorona.jpg

பிரேசிலில், கொஞ்சம் கொஞ்சமாக கொரோனா வைரஸானது பரவி வருகின்றது. அங்கு 50,000 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்த வைரஸில் இருந்து, 25,500 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்த வைரஸால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கையானது, 3330 ஆக உயர்ந்துள்ளது.

அங்கு திடீரென்று மரணமடைபவர்களின் எண்ணிக்கையானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அங்கு இந்த வைரஸால் இறப்பவர்கள் அடக்கும் செய்யும் வீடியோவானது, பரபரப்பாக இணையத்தில் வலம் வருகின்றது.

அந்த வீடியோவானது, பிரேசில் நாட்டின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ள மன்னாஸ் பகுதியில் எடுக்கப்பட்டு உள்ளது. அங்கு, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களை, சவப்பெட்டிக்குள் வைத்து, பெரிய அளவில் கிரேண் மூலம் குழி தோண்டி, புதைக்கின்றனர். பல சவப்பெட்டிகள் ஒரே நேரத்தில் மூடப்படும் காட்சியானது, பார்ப்போரை கண்கலங்க வைக்கும் விதமாக அமைந்துள்ளது.

HOT NEWS