செல்போனில் 4 வாரங்கள் கொரோனா உயிர் வாழும்! விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

12 October 2020 அரசியல்
coronacovid19.jpg

செல்போனின் தொடுதிரைகள் மற்றும் ரூபாய் நோட்டுக்களில் கொரோனா வைரஸானது, 4 வாரங்கள் உயிர் வாழும் தன்மை உடையதாக, விஞ்ஞானிகள் கருதுகின்றனர்.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் விஞ்ஞானிகள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர். அதே சமயம், இந்த வைரஸ் பற்றியும் விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர். அப்படியொரு ஆய்வினை ஆஸ்திரேலிய விஞ்ஞானிகள் செய்ததில், பலத் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த வைரஸ்கள் குறிப்பிட்ட வெப்ப நிலையில், செல்போனின் தொடுதிரை மற்றும் ரூபாய் நோட்டுக்களில் 28 நாட்கள் வரை உயிர் வாழும் தன்மையுடைதாக இருப்பதாக கண்டுபிடித்து உள்ளனர்.

பஞ்சு மற்றும் அது சம்பந்தப்பட்டப் பொருட்களில் 14 மணி முதல் 16 மணி நேரம் வரையிலும் உயிர் வாழும் எனக் கண்டறிந்து உள்ளனர். அதே போல், 20 டிகிரி செல்சியஸ் வெப்ப நிலையில், கண்ணாடி, எஃகு, பிளாஸ்டிக் பொருட்களில் 28 நாட்கள் வரையிலும் இந்த வைரஸ்களால் தாக்குப் பிடிக்க முடியும் எனக் கூறுகின்றனர். 30 டிகிரி செல்சியஸில் இந்த வைரஸ்கள் ஏழு நாட்களாகவும், 40 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையில் இந்த வைரஸ்கள் வெறும் 24 மணி நேரமே உயிர் வாழ்கின்றன எனக் கூறியுள்ளனர்.

HOT NEWS