ஹெச்ஐவி மருந்து ஆராய்ச்சியால் கொரோனா பரவி இருக்கலாம்! விஞ்ஞானி கருத்து!

21 April 2020 அரசியல்
lucmotagnier.jpg

கொரோனா வைரஸானது தற்செயலாக, சீனாவில் உள்ள ஆய்வகத்தில் இருந்து பரவி இருக்கலாம் என, பிரபல விஞ்ஞானி கூறியுள்ளார்.

சீனாவின் ஊஹான் பகுதியில் இருந்து, கொரோனா வைரஸானது உலகம் முழுக்கப் பரவி உள்ளது. இந்த வைரஸானது, வௌவ்வால்களிடம் இருந்து மனிதர்களுக்குப் பரிவ இருக்கலாம் என, சீனாக் கூறியுள்ளது. இதனிடையே, சீனாவின் ஊஹான் பகுதியில் அமைந்துள்ள வைரஸ் ஆய்வகத்தில் இருந்து தான், இந்த வைரஸ் பரவி இருக்கின்றது என, பல நாடுகள் நம்புகின்றன.

அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் சீனா அரசாங்கத்தினைத் தான் குற்றம் சாட்டுகின்றன. இந்நிலையில், இந்த வைரஸானது அந்த ஆய்வகத்தில் இருந்து தற்செயலாக கசிந்து இருக்கலாம் என, நோபல் பரிசு வென்ற விஞ்ஞானியான லூக் மோன்தக்னர் கூறியுள்ளார். தனியார் செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்தப் பேட்டியில், கடந்த 2000ம் ஆண்டு தொடங்கி, கொரோனா வைரஸை சீனா ஆராய்ச்சி செய்து வருகின்றது.

ஹெச்ஐவி வைரஸூம், கொரோனா வைரஸூம் ஒரே மாதிரியான தோலினைக் கொண்டுள்ளன. அதனால், அதற்கு மருந்து கண்டுபிடிக்க இந்த வைரஸ் மீது ஆராய்ச்சி நடந்திருக்கக் கூடும். அவ்வாறு தான், இந்த வைரஸானது பரவி இருக்கலாம் என்றுக் கூறியுள்ளார். வௌவ்வால்களிடம் இருந்து, இந்த வைரஸ் பரவி இருக்கின்றது என்பது ஒரு கட்டுக்கதை எனவும் அவர் கூறியுள்ளார். இது தற்பொழுது புதிய குழப்பத்தினை உருவாக்கி உள்ளது.

HOT NEWS