கொரோனா வைரஸின் புதிய அறிகுறி கண்டுபிடிப்பு! பொதுமக்கள் உஷார்!

06 May 2020 அரசியல்
covidtoes.jpg

உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இந்த வைரஸால் தற்பொழுது வரை(06-05-2020), சுமார் 36 லட்சம் பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில் 12 லட்சம் பேர் குணமாகி வீடு திரும்பியுள்ளனர். துரதிர்ஷ்டவசமாக, 2,57,000 நபர்கள் மரணமடைந்து உள்ளனர். இந்த நோய்க்கு புது புது அறிகுறிகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்து வருகின்றனர்.

இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கப் படாத நிலையில், இந்த நோயால் பொதுமக்கள் இறப்பதைத் தவிர்க்கும் பொருட்டு, பல நாடுகள், ஊரடங்கு உத்தரவினைப் பிறப்பித்து உள்ளன. இருப்பினும், இந்த வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இத்தகைய சூழ்நிலையில், அமெரிக்க விஞ்ஞானிகள் புதிய ஆய்வு ஒன்றினை நடத்தினர்.

அதில், இந்த வைரஸால் பாதிக்கப்படவர்களுக்கு, உடலில் உள்ள தோலில் சிவப்பு நிறத்தில், இரத்த அலர்ஜி ஏற்படுவது கண்டறியப்பட்டு உள்ளது. இது தலை முதல் கால் வரையிலும் பரவுகின்றது. குறிப்பாக, காலின் பாதங்களில், இந்த அலர்ஜியானது உருவாவது கண்டறியப்பட்டு உள்ளது. இதனைத் தற்பொழுது விஞ்ஞானிகள் தீவிரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

HOT NEWS