ஊஹான் ஆய்வுக் கூடத்தில் இருந்து வைரஸ் பரவவில்லை! அதிரடி அறிவிப்பு!

19 April 2020 அரசியல்
wuhanlab.jpg

எங்களுடைய ஆய்வுக் கூடத்தில் இருந்து, கொரோனா வைரஸ் பரவவில்லை என, ஊஹான் ஆய்வுக் கூடம் அதிகாப்பூர்வமாக அறிவித்து உள்ளது.

இது குறித்து விஞ்ஞானிகள் கூறுகையில், எங்களுடைய ஆய்வு மையத்தில் இருந்து இந்த வைரஸானது பரவி இருக்க வாய்ப்பில்லை. இது வௌவால்களிடம் இருந்து தான் பரவ ஆரம்பித்து உள்ளது. வௌவால்களைத் தின்னும் மிருகங்களுக்கும், பின்னர் மிருகங்களிடம் இருந்து மனிதர்களுக்கும் பரவி இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம் உள்ளன. இருப்பினும், இது குறித்த ஆய்வுகள் நடைபெற்று வருகின்றன.

எங்களுடைய ஆய்வகத்தில் உயர்தரமான புரோட்டோக்கால் பின்பற்றப்பட்டு வருகின்றது. அதனால், அங்கிருந்து எதுவும் கசியவோ அல்லது வெளியாகியோ இருக்க வாய்ப்பில்லை என, கூறுகின்றனர். மேலும், பலரும் இங்கிருந்து தான், வைரஸானது லீக்காகி இருக்கும் என கூறி வருகின்றனர். அதற்கான எவ்வித ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

இது எல்லாம் கட்டுக்கதை தான். அவைகளை யாரும் நம்ப வேண்டாம் என்றுக் கூறியுள்ளனர். ஊஹானில் உள்ள டபிள்யூ4(WIV) என்ற ஆய்வகமானது, 2015ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இது தான், சீனாவின் மிகப் பெரிய சக்தி வாய்ந்த ஆய்வகமாகக் கருதப்படுகின்றது. இங்கு உள்ள ஆய்வகமானது பிஎஸ்எல்-4 (BSL-4) என்ற தரத்தில் உள்ளது. இதனால், இங்கு மிகவும் மோசமான வைரஸ்களான எபோலா மற்றும் பார்பர்க் வைரஸ் போன்றவைகளை பரிசோதிக்க இயலும்.

இந்த மாதிரியான ஆய்வகங்கள், உலகிலேயே ஒரு சில இடங்களில் மட்டுமே அமைந்துள்ளன. அவைகளில் தான், கொடூரமான வைரஸ்களுக்கு மருந்துகள் கண்டுபிடிக்கப்படுகின்றன.

HOT NEWS