தென்கொரியாவில் கொரோனா வைரஸின் 2வது அலை! அலறும் மக்கள்!

24 June 2020 அரசியல்
coronachina20.jpg

தென் கொரியாவில், தற்பொழுது கொரோனா வைரஸின் 2வது அலையானது பரவ ஆரம்பித்துள்ளது.

உலகம் முழுக்க கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதன் காரணமாக, 80 லட்சத்திற்கும் அதிகமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நான்கரை லட்சத்திற்கும் அதிகமானோர் பலியாகி உள்ளனர். 50 லட்சத்திற்கும் அதிகமானோர் தற்பொழுது வரை குணமாகி உள்ளனர்.

இந்த சூழ்நிலையில், தென் கொரிய நாட்டில் கொரோனா வைரஸானது, கட்டுப்படுத்தப்பட்டு இருந்தது. இந்த சூழ்நிலையில், தென் கொரியாவில் உள்ள இரவு விடுதிகள் காரணமாக, அங்கு மீண்டும் கொரோனா வைரஸ் வேகமாகப் பரவ ஆரம்பித்தது. அந்நாட்டின் தலைநகரான சோல் நகரில், கடந்த மே மாதம் மீண்டும் முதல் அலையானது, மிகத் தீவிரமாகப் பரவ ஆரம்பித்தது.

இந்த சூழ்நிலையில், முதல் அலையானது ஏப்ரல் வரை நீடித்ததாகவும், தற்பொழுது பரவி இருப்பது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை எனவும் கூறப்படுகின்றது. தற்பொழுது பரவி வருகின்ற கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இது இதற்கு முந்தைய அலையினை விட, வீரியமிக்கதாக இருக்கின்றது என மருத்துவர்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

தற்பொழுது வரை, தென் கொரியாவில் இந்த கொரோனா வைரஸ் காரணமாக, 12,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இதில், 281 பேர் பலியாகி உள்ளனர். 10,000க்கும் அதிகமானோர் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து மீண்டு உள்ளதாக, கொரியாவின் நோய் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவித்துள்ளது.

HOT NEWS