மனிதனிடம் இருந்து பூனைக்கு பரவியது கொரோனா வைரஸ்!

28 March 2020 அரசியல்
catsleep.jpg

சீனாவில் இருந்து உலகம் முழுக்கப் பரவியுள்ள கொரோனா வைரஸானது, தற்பொழுது பூனைக்குப் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

சீனாவில் உள்ள ஊஹான் பகுதியில் உள்ள விலங்குகள் சந்தையில் இருந்து, மனிதருக்கு நோவல் கொரோனா வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிப்பதற்கு முன்னரே, 5,00,000 பேருக்குப் பரவிவிட்டது. மேலும், இந்த வைரஸால் 25,000 பேர் உலகளவில் மரணமடைந்துள்ளனர்.

இந்த வைரஸானது, மனிதனிடமிருந்து விலங்குகளுக்குப் பரவாது என விஞ்ஞானிகளும், டாக்டர்களும் கூறியிருந்தனர். இந்நிலையில், தற்பொழுது இந்த கொரோனா வைரஸானது, மனிதர்களிடமிருந்து மிருகங்களுக்குப் பரவுவது கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.

பெல்ஜியம் நாட்டில், தனது முதலாளியுடன் மிக நெருக்கமாக இருந்த பூனைக்கு இந்த வைரஸ் தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இந்த வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள பூனைக்கு, செரிமாணக் கோளாறு, சுவாசப் பிரச்சனை உட்பட சிலப் பிரச்சனைகள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. பொதுவாக வீட்டு விலங்குகளிடம் இந்த வைரஸ் பரவாது எனக் கூறப்பட்டு வந்த நிலையில், தற்பொழுது மிருகங்களிடம் கண்டறியப்பட்டுள்ளது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

இது தவிர, ஹாங்காங் நகரில் இரண்டு நாய்களுக்கும் இந்த கோவிட்-19 வைரஸ் பரவி இருப்பது உறுதியாகி உள்ளது. இதன் காரணமாக, எட்டு பூனைகள் மற்றும் 17 நாய்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளன. இதனால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பலரும் தங்களுடைய வீட்டு விலங்குகளைப் பாதுகாக்க ஆரம்பித்து உள்ளனர்.

HOT NEWS