பரிசோதனை வெற்றி என்றால், செப்டம்பரில் ஊசி! 1000 ரூபாயாக இருக்கும்!

29 April 2020 அரசியல்
covidvaccine19.jpg

மனிதர்கள் மீது நடத்தப்படும் பரிசோதனையானது, வெற்றிகரமாக நடத்தப்பட்டால், கண்டிப்பா வருகின்ற செப்டம்பர் மாதம், கொரோனா வைரஸிற்கான ஊசி தயாராகிவிடும் என்று கூறப்பட்டு உள்ளது.

புனேவினை தலைமையிடமாகக் கொண்ட சீரம் இன்ஸ்ட்டிடியூட் ஆப் இந்தியா நிறுவனத்தின் தலைவர் சைரஸ் பூன்னாவல்லா, தனியார் செய்தி நிறுவனத்திற்குப் பேட்டியளித்தார். அவர் பேசுகையில், நம்முடைய நிறுவனம், குழந்தைகளுக்கான 65% தடுப்பு ஊசிகளையும், ஒரு சில மருந்துகளையும் உருவாக்கி வருகின்றது.

தற்பொழுது, கொரோனா வைரஸிற்கு இங்கிலாந்தில் மருந்து தயாரிக்கப்பட்டு உள்ளது. இந்த மருந்தானது, மனிதர்கள் மீதும் சோதனை செய்யப்பட்டு உள்ளது. இந்த சோதனை வெற்றி அடையும் பட்சத்தில், கண்டிப்பாக இந்த கொரோனா வைரஸிற்கான ஊசியினை, செப்டம்பர் மாதம் உருவாக்க இயலும். எப்படியும், ஒரு ஊசியானது, 1000 ரூபாயில் கிடைக்கும்படி, உருவாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றுக் கூறியுள்ளார்.

HOT NEWS