சுஷாந்சிங் மரணம்! சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு!

18 August 2020 சினிமா
sushantcbi.jpg

சுஷாந்த் சிங் மரணம் தொடர்பாக விசாரிக்க, சிபிஐ அமைப்பிற்கு நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பாலிவுட் பிரபல நடிகர் சுஷாந்த்சிங் ராஜ்புத், தன்னுடைய வீட்டிலேயே தூக்கு மாட்டிக் கொண்டு கடந்த ஜூன் 14ம் தேதி அன்று தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக பாட்னா மற்றும் மும்பை நகரங்களில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதில் கட்டாயம் நீதி வேண்டும் என, அவருடைய ரசிகர்கள் உட்பட, இந்தியர்கள் பலரும் குரல் கொடுத்து வருகின்றனர்.

பாலிவுட்டில் உள்ள சிலத் திரை நட்சத்திரங்கள் தான், இவரின் மறைவிற்குக் காரணம் எனவும் கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், திடீர் திருப்பமாக, சுஷாந்த் சிங்ன் காதலி ரியா மீது, பலருக்கும் சந்தேகம் ஏற்பட்டது. அவர் பலமுறை சுஷாந்தின் பணத்தினை அதிகளவில் பயன்படுத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

மேலும், பாட்னாவில் உள்ள இந்த வழக்கினை, மும்பை காவல்நிலையத்திற்கு மாற்ற அவர் கோரிக்கை விடுத்து வந்தார். இந்நிலையில், இந்த விஷயத்தினை விசாரித்த நீதிமன்றம், சுஷாந்த்சிங் ராஜ்புத்தின் மரணம் தொடர்பாக, சிபிஐ அமைப்பு விசாரிக்க இன்று உத்தரவிட்டது. இதற்குத் தற்பொழுது பலரும் தங்களுடைய வரவேற்பினை தெரிவித்து வருகின்றனர்.

HOT NEWS