கோவையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பெண்கள் உடை மாற்றும் அறையில், செல்போன் மூலம் வீடியோ எடுத்தவர் உட்பட, மூன்று பேரினை போலீசார் கைது செய்துள்ளனர்.
கோவையில் உள்ள தனியார் பெட்ரோல் பங்கில், பெண்கள் உடை மாற்றும் அறையில், தன்னுடைய செல்போனை ரகசியமாக வைத்து அங்கு வந்து உடை மாற்றும் பெண்களை, வீடியோ எடுத்துள்ளார் ஒரு நபர். மேட்டூர்பாளையத்தில் இந்த சம்பவம் நடைபெற்று உள்ளது. இந்நிலையில், அங்கு சுபாஷ் என்ற இளைஞரும், அவருடைய மனைவியும் வேலை செய்துள்ளனர். ஒரு நாள் எதேச்சையாக சுபாஷின் மனைவி, அங்கு செல்போன் இருப்பதைக் கண்டுபிடித்துள்ளார்.
இதனையடுத்து, வீடியோ எடுத்தவரைக் கண்டித்த சுபாஷ், அவர் எடுத்த வீடியோக்களை தன்னுடைய மொபைலுக்கு மாற்றியுள்ளார். பின்னர், வீடியோ எடுத்த நபரை மிரட்டியிருக்கின்றார். மேலும், இந்த விஷயத்தினை, பெட்ரோல் பங்கின் உரிமையாளருக்குத் தெரிவித்துள்ளனர். இதனால், இருவரையும் கண்டித்துள்ளார் உரிமையாளர்.
இதனிடையே சில நாட்கள் கழித்து, அப்பகுதியில் உள்ள தனியார் தொலைக்காட்சியில் பணியாற்றும், மருதாட்சலம் என்பவருக்கு இந்த வீடியோவினை ஷேர் செய்துள்ளார். இதனையடுத்து அந்த வீடியோக்கள் கடந்த ஜனவரி 7ம் தேதி, இணையத்தில் கசிந்தது. இதனையடுத்து, விஷயம் அறிந்த போலீசார் மருதாட்சலம், வீடியோ எடுத்த நபர் மற்றும் சுபாஷ் ஆகிய மூன்று பேரையும் ஏழு பிரிவுகளின் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மேலும், அவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைதும் செய்துள்ளனர்.