இந்தியாவின் முதல் கொரோனா மருந்து covaxin! சோதனைக்கு தயார்!

30 June 2020 அரசியல்
covaxin.jpg

இந்தியாவில் தயாரிக்கப்பட்டு உள்ள, கொரோனா வைரஸிற்கு எதிரான மருந்தானது தற்பொழுது முதற்கட்ட சோதனைக்கு தயாராகி உள்ளது.

உலகம் முழுக்க பரவியுள்ள கொரோனா வைரஸிற்கு, மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியானது தீவிரமாக நடைபெற்று வருகின்றது. இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில், சீனா உட்பட உலகின் பல நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. ரஷ்யா தன்னுடைய அவிபாவிர் என்ற மருந்தினை, தற்பொழுது பல மருத்துவமனைகளில் பயன்படுத்தி வருகின்றது. அதே போல், அமெரிக்க நாடானது, ரெம்டெசிவர் என்ற மருந்தினை தற்பொழுது இந்தியா உட்பட, உலகின் பல நாடுகளுக்கு வழங்கி வருகின்றது.

உலகம் முழுக்கத் தற்பொழுது வரை, 110க்கும் அதிகமான மருந்துகள் தற்பொழுது ஆய்வுக் கட்டத்தில் உள்ளன. இதனிடையே இந்தியாவின் ஐசிஎம்ஆர் உடன் ஹைதராபாத்தினை சேர்ந்த பாரத் பயோடெக் நிறுவனம் இணைந்து புதிய மருந்து ஒன்றினை உருவாக்கி உள்ளது. அம்மருந்திற்கு கோவாக்சின் எனப் பெயர் வைத்துள்ளனர். இந்த மருந்தினைப் பரிசோதிக்க டிசிஜிஐ எனப்படும் மருந்து கட்டுப்பாட்டு மற்றும் பயன்பாட்டுப் பிரிவு இந்தியா கவுன்சில் அனுமதி வழங்கி உள்ளது.

இதனால், வருகின்ற ஜூலை மாதத்தில் முதற்கட்ட சோதனை, இரண்டாம் கட்ட சோதனை மற்றும் மனிதர்கள் மீது இந்த மருந்தானது சோதிக்கப்பட உள்ளது. ஒருவேளை, இந்த மருந்தானது வெற்றி பெறும் பட்சத்தில், இந்தியாவில் மட்டுமின்றி உலகின் பல நாடுகளுக்கும் இந்த மருந்தானது அனுப்பி வைக்கப்படும் என்றுக் கருதப்படுகின்றது.

HOT NEWS