இந்தியாவின் சார்பில் கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தானது, விலங்குகள் மீது சோதிக்கப்பட்டதில் வெற்றி பெற்று உள்ளதாக பாரத் பயோடெக் நிறுவனம் தெரிவித்து உள்ளது.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. இதறால், பல லட்சம் பேர் பலியாகி உள்ளனர். இந்த வைரஸிற்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல முன்னணி மருந்து தயாரிக்கும் நிறுவனங்கள் தீவிரமாக ஈடுபட்டு உள்ளன. இதில், இந்தியாவின் பிரசித்திப் பெற்ற பாரத் பயோடெக் நிறுவனம் கொரோனாவிற்கு எதிராக கோவாக்ஸின் என்றப் புதிய மருந்தினை உருவாக்கி உள்ளது.
இந்த மருந்தானது, தற்பொழுது மனிதர்கள் மீது சோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த மருந்தானது, தற்பொழுது 2வது கட்டப் பரிசோதனையில் உள்ளது. இந்த மருந்தானது விலங்குகள் மீதும் சோதிக்கப்பட்டது. இந்த சோதனைக் குறித்த முடிவுகள் தற்பொழுது வெளியிடப்பட்டு உள்ளன. அதில், இந்தியாவில் தயாரிக்கப்பட்ட கொரோனா வைரஸிற்கு எதிரான, கோவாக்ஸின் மருந்தானது, வெற்றி பெற்றுள்ளதாக அறிவித்துள்ளது.
இந்த ஊசியினைப் பயன்படுத்தியதால், கொரோனாவால் அதிகம் பாதிக்கப்படும் நுரையீரல் பகுதியில், எதிர்ப்பு சக்தியானது அதிகரித்து உள்ளது. மேலும், கொரோனா தொற்றும் கட்டுக்குள் வந்துள்ளது எனத் தெரிய வந்துள்ளது. இது குறித்துக் கருத்துத் தெரிவித்துள்ள பில்கேட்ஸ், இந்தியாவின் கொரோனா மருந்து, நம்பிக்கை அளிப்பதாகக் கூறியுள்ளார். இந்த ஊசியானது, வருகின்ற 2021ம் ஆண்டு ஜனவரி மாதம் பயன்பாட்டிற்கு வரும் எனக் கூறப்படுகின்றது.