இந்த ஆண்டு இறுதிக்குள் கோவாக்ஸின் மருந்து! இந்தியா அறிவிப்பு!

21 August 2020 அரசியல்
covaxin.jpg

இந்த ஆண்டு இறுதிக்குள் கோவாக்ஸின் மருந்து கிடைக்கும் என, மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

இந்தியா முழுக்க நாளுக்கு நாள், கொரோனா வைரஸானது வேகமாகப் பரவி வருகின்றது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து, இந்த ஊரடங்கானது நீட்டிக்கப்பட்டுக் கொண்டே உள்ளது. இதனால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை முன்னிட்டு, இதற்கான மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் இந்திய விஞ்ஞானிகளும் தீவிரமாக ஈடுபட்டு உள்ளனர்.

இது குறித்து இன்று பேசிய மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன், இந்த ஆண்டு இறுதிக்குள் கோவாக்ஸின் மருந்து தயாராகிவிடும் என்றுக் கூறியுள்ளார். அதே போல், இந்தியாவில் மொத்தம் 3 தடுப்பூசிகள் தயாரிக்கப்பட்டு வருவதாகவும், கோவாக்ஸின் மருந்தின் 3வது கட்ட சோதனையானது இந்த ஆண்டுக்குள் முடிந்துவிடும் எனவும் கூறினார்.

மூன்றாவது கட்ட சோதனையில் வருகின்ற முடிவினைப் பொறுத்து, அடுத்த ஆண்டுத் தொடக்கத்திலேயே இந்த மருந்துப் பயன்பாட்டிற்கு வந்துவிடும் எனவும், மேலும், பிற தடுப்பூசிகள் தயாராக கூடுதலாக ஒரு மாதம் ஆகலாம் எனவும் கூறியுள்ளார்.

HOT NEWS