ஆகஸ்ட் 15ம் தேதி கொரோனா மருந்து வராது! மருந்து நிறுவனம் அறிவிப்பு!

31 July 2020 அரசியல்
covaxin.jpg

இந்தியாவில் வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி அன்று, கொரோனாவிற்கான தடுப்பூசியானது வராது என, பாரத் பயோடெக் நிறுவனம் அதிகாரப் பூர்வமாகத் தெரிவித்து உள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் காரணமாக, ஒன்றரைக் கோடிக்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் ஒரு லட்சத்து 90 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர். ஒரு கோடிக்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றில் இருந்து குணமாகி உள்ளனர். தற்பொழுது இந்த வைரஸிற்கு எதிரான தடுப்பு மருந்தினைத் தயாரிக்கும் முயற்சியில், உலக நாடுகள் பலவும் மும்முரமாக செயல்பட்டு வருகின்றன.

இந்தியாவில் 16 லட்சம் பேர், இந்த கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்தியாவின் ஐசிஎம்ஆர் அமைப்பானது, பாரத் பயோடெக் நிறுவனத்துடன் இணைந்து, கொரோனா வைரஸிற்கு எதிரான தடுப்பூசியினை உருவாக்கி இருந்தது. இந்த ஊசியானது, தற்பொழுது பரிசோதனை செய்யப்பட்டு வருகின்றது. இந்த ஊசியானது, வருகின்ற ஆகஸ்ட் 15ம் தேதி சுதந்திரத் தினத்தன்று பயன்பாட்டிற்கு வரும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது.

தற்பொழுது இது குறித்து புதிய அறிக்கை ஒன்றினை வெளியிட்டு உள்ளது. அதில், கோவேக்சின் ஊசியானது ஆய்வில் உள்ளது. ஆய்வு முடிந்ததும் இது எப்பொழுது வெளியாகும் என்றத் தகவல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். பரிசோதனைகளின் முடிவுகளைப் பொருத்தே இந்த மருந்து குறித்து தகவல்கள் பகிரப்படும் என்றுக் கூறியுள்ளது. இதனால், இம்மருந்து ஆகஸ்ட் 15ம் தேதிக்குள் கிடைக்காது என்றுக் கூறப்படுகின்றது.

HOT NEWS