கொரோனாவால் உயிரிழந்தவர்களின் உடல்கள் மாற்றம்! அதிகாரிகள் சஸ்பெண்ட்!

09 July 2020 அரசியல்
doctoroperation.jpg

கொரோனாவால் உயிரிழந்த நோயாளிகளின் உடல்களை, மாற்றி வழங்கியதால், எய்ம்ஸ் மருத்துவமனை ஊழியர்கள் இரண்டு பேர், சஸ்பெண்ட் செய்யப்பட்டு உள்ளனர்.

டெல்லியில் கொரோனா வைரஸ் காரணமாக, கடுமையான பாதிப்புகள் உருவாகி வருகின்றன. சமீபத்தில் அப்படி ஒரு சம்பவம் எய்ம்ஸ் மருத்துவமனையில் நடைபெற்று உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த அன்ஜூம் என்றப் பெண்மணி, கொரோனாவால் பலியானார். அவருடைய உடலானது, அவருடைய குடும்பத்தாரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதனை இஸ்லாமிய முறைப்படி அடக்கம் செய்ய முயற்சிப்பதற்கு முன், அவரின் முகத்தினைப் பார்த்தக் குடும்பத்தாருக்கு அதிர்ச்சிக் காத்திருந்தது.

அது அன்ஜூமின் உடலே இல்லை. குஷூம்லதா என்றப் பெயரானது, அந்த சவத்தின் டேக்கில் இருந்ததைக் கண்டு குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகிகளிடம், அன்ஜூமின் குடும்பத்தார் விசாரித்தனர். அப்பொழுது, கொரோனாவால் பலியான நான்கு பேரின் உடலினை ஆம்புலன்சில் ஏற்றி, அவரவர் வீடுகளுக்கு அனுப்பும் பணி நடைபெற்றதாகவும், அதில் மூன்று பேர் இந்து எனவும் கூறினர்.

அதனடிப்படையில், இந்த உடலும் அவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது எனவும், ஆனால் உடல் மாறியிருப்பதுப் பற்றி எங்களுக்குத் தெரியாது எனவும் கூறினர். இது குறித்துக் கவனக் குறைவாக செயல்பட்ட, இரண்டு பிரதேப் பரிசோதனைக் கூட ஊழியர்களை சஸ்பெண்ட் செய்தனர். பின்னர், அன்ஜூமின் உடலினை நாங்கள் ஏற்கனவே, தகனம் செய்துவிட்டோம் எனவும், இந்தாருங்கள் அவருடைய சாம்பல் எனவும் வழங்கி உள்ளனர்.

இதனைப் பார்த்த அன்ஜூமின் குடும்பத்தார் அதிர்ச்சி அடைந்தனர். இதனை எங்களால், வாங்கிக் கொள்ள முடியாது எனக் கூறினர். மேலும், குஷூம்லதாவின் உடலினை, எய்ம்ஸிடம் ஒப்படைத்தனர். அதனைப் பெற்ற எய்ம்ஸ் நிர்வாகம் அதனையும் தகனம் செய்தது. இது குறித்து அதன் நிர்வாகம் கூறுகையில், இதுவரை குஷூம் லதாவினைப் பற்றி யாரும் வந்து விசாரிக்கவில்லை. கொரோனா நோயால் உயிரிழந்தவர் என்பதால், அவருடைய உடலை அடக்கம் செய்துவிட்டோம் என்றுக் கூறியுள்ளனர்.

இது குறித்து, அங்குள்ள காவல் நிலையத்தில் அன்ஜூமின் குடும்பத்தார் புகார் அளித்தனர். ஆனால், எப்ஐஆர் பதிவு செய்வதற்கு முன்பாகவே, இப்பிரச்சனையானது பேசித் தீர்க்கப்பட்டதாக, டிஎஸ்பி தெரிவித்துள்ளார். இச்சம்பம், தற்பொழுது அதிர்ச்சியினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS