ஜப்பானில் கொரோனாவின் 2வது அலை! பொதுமக்கள் அச்சம்!

03 August 2020 அரசியல்
coronavirusdelhi.jpg

ஜப்பானில் தற்பொழுது கொரோனா வைரஸின் 2வது அலையானது, வேகமாகப் பரவி வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளது.

உலகம் முழுவதும் பரவியுள்ள கொரோனா வைரஸிற்காக, ஜப்பான் அரசு அவசரக் கால நிலையினைப் பிரகடனப்படுத்தியது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடத் தடை விதிக்கப்பட்டது. அவசரம் மற்றும் அத்தியாவசியத் தேவைகளுக்காக மட்டுமே வெளியில் வர அனுமதிக்கப்பட்டனர். இந்த சூழ்நிலையில், கொரோனா வைரஸானது அங்கு கட்டுக்குள் வந்தது.

இதனைத் தொடர்ந்து, கடந்த மாதம் அவசர நிலையினை திரும்பப் பெற்றது. மேலும், மாலை நேரங்களில் பொதுமக்கள் கூடுவதற்கு இருந்து வந்தத் தடையும் நீக்கப்பட்டது. இதனால், பொதுமக்கள் இரவு நேர விடுதிகள், ஹோட்டல்களில் பொதுமக்கள் வெளியில் சுற்றத் துவங்கினர். இதனால், மீண்டும் கொரோனா தொற்று பரவும் அச்சம் ஏற்பட்டது.

ஜப்பான் நாட்டின், ஃபுகுயோகா தீவின் கிடாக்கியூஷூ என்றப் பகுதியில் வசித்து வந்த 22 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த முறை, அறிகுறிகள் இல்லாத கொரோனா பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கு தற்பொழுது கொரோனா வைரஸின் 2வது அலைப் பரவி இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், ஜப்பானில் கடும் அச்சம் எழுந்துள்ளது.

இதனால், மீண்டும் ஊரடங்கு விதிகளை அமலுக்கு கொண்டு ஜப்பான் அரசு திட்டமிட்டு உள்ளது. இது தற்பொழுது பொதுமக்களிடம் அச்சத்தினை ஏற்படுத்தி உள்ளது.

HOT NEWS