கொசு மூலம் இந்த வைரஸ் பரவுமா? ஆய்வில் அதிர்ச்சி தகவல்!

26 March 2020 அரசியல்
mosquito121.jpg

உலகம் முழுவதும் தற்பொழுது வரை, 4,52,168 பேர் இந்த கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்தியாவினைப் பொருத்தமட்டில் 650 பேர் இந்த வைரஸால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இந்த வைரஸானது பல விதங்களில் பரவி வருகின்றது என்றாலும், மனிதர்களிடம் இருந்து தான் மற்றொரு மனிதருக்கு பரவுவது உறுதி செய்யப்பட்ட ஒன்றாகும். இதனால் தான் இவ்வளவு பேர், மிகக் குறுகியக் காலக் கட்டத்திற்குள் பாதிக்கப்பட்டு உள்ளனர். இந்நிலையில், இந்த நோயானது கொசுக்கள் மூலமும் பரவும் என தகவல்கள் காட்டுத் தீ போல், வாட்ஸ்ஆப்பில் பரவ ஆரம்பித்தன.

இதுவரை 10 பேர் பலியாகி உள்ள நிலையில், ஏப்ரல் 14ம் தேதி வரை இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. பொதுமக்களிடம் பரவி வரும் வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் பொருட்டு, மத்திய சுகாதாரத்துறையானது தற்பொழுது விளக்கம் அளித்துள்ளது.

அதில், கொசுவின் மூலமாக இந்த கொரோனா வைரஸானது பரவாது என தெரிவித்துள்ளது. அதே போல், சாராயம் குடிப்பதாலும், வெள்ளைப் பூண்டு சாப்பிடுவதாலும் கொரோனா வைரஸ் பாதிப்பினை தடுக்கலாம் என்பதும் பொய்யான வதந்திகள் தான் எனவும் விளக்கமளித்துள்ளது.

HOT NEWS