கிரெடிட், டெபிட் கார்டுகளின் இரகசியக் குறியீட்டைப் பாதுகாக்க ஒரு சில டிப்ஸ்

10 March 2019 தொழில்நுட்பம்
creditcard.jpg

இன்றைய டிஜிட்டல் உலகில் பணப்பரிவர்தனை என்பது, பெரும்பாலும் சாதாரணக் கரென்சியைப் பயன்படுத்தியே நடைபெறுகிறது. பிட்காயின் பயன்பாடு அதிகரித்தாலும், உலகளவில் அந்தந்த நாட்டுப் பணத்தையே அனைவரும் பயன்படுத்துகின்றனர். பெரும்பாலானேர், நம் நாட்டில் வங்கிக் கணக்கை கிட்டத்தட்ட ஆரம்பித்துவிட்டனர். இதனைப் பயன்படுத்தி, கிரெடிட் கார்டுகள் மக்களிடம் தேவைக்காகவும், வலுக்கட்டாயமாகவும் திணிக்கப்படுகிறது. சாமானிய மக்களுக்கு, இதனை எப்படி பத்திரமாக பயன்படுத்துவது என தெரியாது. ஏன், படித்த மேதாவிகள் கூட இந்த விஷயத்தில் கோட்டை விட்டு விடுகின்றனர். எனவே, பின்வரும் வழிகளைக் கடுமையாகப் பின்பற்றினால் நாம் நம் பணத்தைத் திருடர்களிடமிருந்து காப்பற்ற இயலும்.

1 E-Commerce வலைத் தளங்களில் Credit/ Debit Card தகவல்களை அளிக்காமலிருத்தல்

ஈகாமர்ஸ் எனப்படும் வலைதள வணிக மையங்களில் எ.கா (Flipkart, Amazon…), நாம் நம் வசதிக்காக கிரெடிட் மற்றும் டெபிட் கார்டு தகவல்களைச் சேமிக்கிறோம். இதற்கு அந்த நிறுவனங்கள் பாதுகாப்பிற்கான உத்திரவாதம் அளிக்கின்றன. ஆனால், ஒரு வேலை நீங்கள் பயன்படுத்தும் ஈகாமர்ஸ் வெப்சைட்டின் அக்கவுண்ட் ஹேக் செய்யப்பட்டுவிட்டாலோ, அல்லது வேறொருவர் பயன்படுத்தினாலோ, உங்களுடைய கிரெடிட் மற்றும் டெபிட் கார்டின் இரகசியத்தை எளிதாக அறிய இயலும்.

2. கணினி மற்றும் தொலைபேசியில் தகவல்களை சேமிக்காதிருத்தல்

ஒரு வேலை நம்முடை கணினியோ (அ) தெலைபேசியோ ஹேக் செய்யப்பட்டுவிட்டால், எளிதாக நம் பணத்தைப் பயன்படுத்த இயலும். இதற்கு "வானக்ரை ராம்சர்" (wannacry ransomeware) ஒரு சிறந்த உதாரணம் ஆகும். இப்படிப்பட்ட, வைரஸ்களால் உலகளவில் பல்லாயிரம் கணினிகள் தினந்தினமும் பாதிக்கப்படுகின்றன. இந்தப் பாதிப்பின் மூலம் ஹேக்கர்கள் லட்சக்கணக்கான கிரெடிட் மற்றும் டெபிட் மூலம் பல கோடி ரூபாய் பணத்தை திருடிவிடுகின்றனர்.

3. பிறரிடம் இரகசியக் குறியீட்டைக் கூறாமலிருத்தல்

இது மிகவும் முக்கியமான மற்றும் அத்தியாவசியமான ஒன்றாகும். தயவுசெய்து இரகசியக் குறியீட்டை யாரிடமும் பகிர வேண்டாம், அது உங்களுக்குகே ஆபத்தாக முடியலாம்.

4. குழந்தைகளிடம் கொடுக்க வேண்டாம்

குழந்தைகளுக்கு கிரெடிட், டெபிட் கார்டுகளைப் பற்றி தெரியாது. எனவே, தயவு செய்து யாரும் குழந்தைகளிடம் தர வேண்டாம். ஏனெனில், குழந்தைகளுக்கு இதன் மதிப்பும் இதன் தாக்கமும் தெரியாது. தெரியாமல், குழந்தைகள் இதனை தொலைத்துவிட்டால், அதுப் பெரியத் தலைவலியாக அமைய வாய்ப்புண்டு.

HOT NEWS