அமெரிக்காவில் கச்சா எண்ணெயின் விலையானது, வரலாறு காணாத வீழ்ச்சியினை சந்தித்துள்ளது.
அமெரிக்காவில் தற்பொழுது கொரோனா வைரஸானது, வேகமாகப் பரவி வருகின்றது. அங்கு தினமும் இரண்டாயிரத்திற்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர். உலகின் பல நாடுகளில், ஊரடங்கு உத்தரவானது அமலில் உள்ளது. இதனால், பொதுமக்கள் வெளியில் நடமாடுவதும் குறைந்துள்ளது. பொதுப் போக்குவரத்து முதல் தனியார் போக்குவரத்து வரை அனைத்தும் குறைந்து விட்டதால், எரிபொருள் தேவையானது குறைந்துள்ளது.
ஆனால், ஏற்கனவே, கொள்முதல் செய்யப்பட்ட எரிபொருளின் விலையானது கடுமையாகப் பாதிக்கப்பட்டு உள்ளது. இந்த எரிபொருள் தேக்கத்தின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையானது நிலையற்ற தன்மையுடையதாக மாறியுள்ளது. ஓபேக் நாடுகள்(உற்பத்தி நாடுகள்) வருகின்ற மே மாதம் முதல், கச்சா எண்ணெய் உற்பத்தியினை குறைக்க ஒப்புக் கொண்டு உள்ளன.
அமெரிக்காவில் பொது ஊரடங்கு நடப்பில் இருந்தாலும், பெரும்பாலான மக்கள் வீதிகளில் நடமாடிக் கொண்டு தான் இருக்கின்றனர். இதனால் உலகின் மற்ற நாடுகளில் 150 முதல் 175 டாலர் அளவிற்கு, எரிபொருள் செலவு குறைந்துள்ளது. இதன் காரணமாக, எரிபொருளின் விலைக் கடுமையாக வீழ்ச்சியடைந்துள்ளது. தற்பொழுது அமெரிக்காவில் விற்கப்படும் கச்சா எண்ணெய் விலையானது, ஒரு பேரல் 0.50 டாலருக்கு விற்கப்படுகின்றது.
அமெரிக்காவின் டபிள்யூடிஐ நிறுவனத்தின் கணக்குப்படி, இந்த நிலைத் தொடரும் என்றுக் கூறப்படுகின்றது. அமெரிக்காவின் வரலாற்றில், இந்த விலைக்கு கச்சா எண்ணெய் விலைக் குறைந்துள்ளது இதுவே முதல் முறை. இருப்பினும், இதனால் அந்நாட்டின் பொருளாதாரம் பாதிக்கப்படுமா என்ற ஆய்வுகள் தற்பொழுது நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், இந்தியாவில் இதன் காரணமாக, பெட்ரோல், டீசல் விலைக் குறையுமா என்று எதிர்பார்க்கப்படுகின்றது.