கச்சா எண்ணெய் விலையைக் குறைக்க உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு!

13 April 2020 அரசியல்
oil-barrels.jpg

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கத்தினைக் குறைக்கும் பொருட்டு, அதன் உற்பத்தியின் அளவினைக் குறைக்க, எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் முடிவு செய்துள்ளன.

தற்பொழுது எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில், சவுதி அரேபியாவிற்கும், ரஷ்யாவிற்கும் இடையில் யுத்தமே நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. இவர்களுக்கு இடையில் நடைபெறும் சண்டையின் காரணமாக, கச்சா எண்ணெய் விலையானது, கடும் ஏற்ற இறக்கத்தினை சந்தித்து வருகின்றன.

இதற்கு முடிவு கட்டும் பொருட்டு, ஏப்ரல் 12ம் தேதி அன்று, இரண்டு நாடுகளுக்கு இடையிலும், பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில், ஓபெக் (OPEC) அமைப்பில் இடம் பெற்றுள்ள நாடுகள் கலந்து கொண்டன. ரஷ்யாவின் சார்பில், எரிசக்தித் துறை அமைச்சரும், சவுதியின் சார்பில் அப்தலசிஸ் பின் சல்மானும் கலந்து கொண்டனர்.

இதில் ஏற்பட்ட தற்காலிக உடன்படிக்கையின் படி, தினமும் பத்து மில்லியன் பாரல் எண்ணெய் உற்பத்தி செய்து கொண்டிருந்த மெக்சிகோ, இனி தினமும் 9.7 மில்லியன் பேரல் எண்ணெயை உற்பத்தி செய்ய ஒப்புக் கொண்டுள்ளது. அதேபோல், தினமும் 27 மில்லியன் பேரல் எண்ணெய் தேவையானது, வருகின்ற மே மாதம் முதல் 20 மில்லியன் பேரல் என்னும் அளவிற்கு குறைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனை முன்னிட்டே, உலகின் எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகள் பலவும், தங்களுடைய உற்பத்தியினைக் குறைத்து வருவதாக செய்திகள் தெரிவிக்கின்றன. இவ்வாறு, எண்ணெய் உற்பத்தியினைக் குறைப்பதன் மூலம், எரிசக்தியினை சேமிக்க இயலும் எனவும், அதுமட்டுமின்றி எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள நிலையற்றத் தன்மையானது குறையும் எனவும் கூறப்படுகின்றது.

HOT NEWS