7,000 பேரை வேலையை விட்டுத் தூக்கிய சிடிஎஸ்!

31 October 2019 அரசியல்
jobloss.jpg

தன்னுடைய நிறுவனங்களில் இருந்து, சுமார் 7000 பேரை இனி வரும் காலங்களில் வேலையிலிருந்து சிடிஎஸ் நீக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது குறித்து வெளியாகியுள்ள செய்தியில், கிளவுட் கம்ப்யூட்டிங் மற்றும் மற்ற தொழில்நுட்பங்களில் முதலீடு செய்வதற்காக, சிடிஎஸ் நிறுவனம் அடுத்து வரும் காலங்களில் சுமார் 7000 பணியாளர்களை, வேலையிலிருந்து நீக்க உள்ளது. அதே போல், அந்நிறுவனத்தில் பணிபுரியும் 5,000 ஊழியர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சி அளிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் பரவி வருகின்றன.

தற்பொழுது ஹைதராபாத்தில் உள்ள சிடிஎஸ் பிரிவில், பேஸ்புக் ப்ராஜெக்ட் சென்று கொண்டு இருக்கின்றது. பேஸ்புக்கில் வரும் வீடியோக்கள், பதிவுகள் ஆகியவற்றினை வடிகட்டும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வேலையில் இருக்கும் பணியாளர்களை, வேலையை விட்டுத் தூக்குவது இந்த வருடத்தில் புதியதாக செய்யப்படவில்லை. ஏற்கனவே, சிடிஎஸ் நிறுவனத்தில் இருந்து, இந்த ஆண்டு பல முறை வேலை நீக்கம் நடைபெற்றுள்ளது. நிறுவனத்தின் செலவுகளைக் குறைப்பதற்காகவும், நிறுவனத்தினை அடுத்தக் கட்டத் தொழில்நுட்பத்திற்கு கொண்டு செல்வதற்காகவும் இத்தகைய வேலை நீக்கம் நடத்தப்படுகின்றன.

source:www.indiatoday.in/business/story/cognizant-to-lay-off-7-000-employees-shut-content-moderation-business-1614279-2019-10-31

HOT NEWS