கடந்த ஆண்டைக் காட்டிலும், இந்த 2019ம் ஆண்டின் முதல் கால் பகுதியில், கிட்டத்தட்ட பாதி அளவிற்கு, லாபம் குறைந்ததால், அந்த நிறுவன ஊழியர்கள் கவலையில் உள்ளனர்.
இந்தியாவின் இரண்டாவது, மிகப் பெரிய ஐடி நிறுவனம் சிடிஎஸ். அமெரிக்க நிறுவனமான இந்தக் கம்பெனியில், லட்சக்கணக்கான ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். நல்ல லாபத்தில் சென்று கொண்டிருந்த இந்தக் கம்பெனி, தற்பொழுது சிக்கலில் உள்ளது.
5% வளர்ச்சி இருந்தாலும், அதன் லாபம் கிட்டத்தட்ட 63 சதவீதமாக குறைந்துள்ளது. இந்நிலையில், கம்பெனியின் செலவுகளை குறைப்பதற்காக, அக்கம்பெனியில் இருந்து, தேவையற்ற வேலையாட்களை நீக்க வாய்ப்புள்ளதாக, நிபுணர்கள் கருதுகின்றனர். ஒருவேளை அவ்வாறு, நிகழ்ந்தால், அது கண்டிப்பாக, ஊழியர்களை பாதிக்கும் என்பதில் ஐயமில்லை.
உலகளவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மந்த நிலையும், போட்டிக் கம்பெனிகளின் வளர்ச்சியுமே, இந்த பிரச்சனைக்கு காரணமாக இருக்கலாம் என, வணிக ஆய்வாலர்கள் கருதுகின்றனர்.
source:linkedin.com