சிடிஎஸ் நிறுவனத்தில் வேலை செய்து வரும் ஊழியர்களை, வீட்டிற்கு அனுப்ப உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன. தொடர்ந்து, கடந்த இரண்டு காலாண்டாக, லாபம் முற்றிலும் குறைந்து விட்டதால், லாபத்தை அதிகரிக்கும் வகையிலும், செலவுகளை குறைப்பதிலும் தற்பொழுது அந்த சிடிஎஸ் நிறுவனம் ஈடுபட்டுள்ளது.
இந்தியாவின், இரண்டாவது பெரிய ஐடி நிறுவனமான சிடிஎஸ் நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்தது. இந்நிறுவனத்தில் கிட்டத்தட்ட, 2.85 லட்சம் பணியாளர்கள் உள்ளனர். ஆசிய அளவில் உள்ள ப்ராஜெக்டுகள், பேங்கிங் ப்ராஜெக்டுகளைத் தேடித் தேடி எடுத்த வேலை செய்து வருகிறது சிடிஎஸ். இந்நிலையில், அமெரிக்காவில் ட்ரெம்ப் அதிபராக வந்ததில் இருந்து, அமெரிக்காவில் இருந்து, பெரும்பாலான ப்ராஜெக்டுகள் வெளியில் செல்வதில்லை. மேலும், மியான்மர், பூட்டான், சீனா போன்ற நாடுகள் இந்தியாவை விட மிகக் குறைந்த விலையில், ப்ராஜெக்டுகளை செய்து தருவதால், இந்தியாவிற்கு இதுவரை வந்து கொண்டிருந்த, ப்ராஜெக்டுகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளது.
மேலும், இந்தியாவிலும் பல நிறுவனங்கள் மாபெரும் வளர்ச்சி அடைந்துள்ளதால், கடும் நெருக்கடியில் டிசிஎஸ் மற்றும் சிடிஎஸ் நிறுவனங்கள் உள்ளன. இந்நிலையில், லாபம் கணிசாக குறைந்துள்ளதால், பணியில் இருக்கும் பணியாளர்களை வேலையில் இருந்து நீக்குவது குறித்து, ஆலோசனை செய்து வருவதாக, எகானாமிக் டைம்ஸ் செய்தி நிறுவனம் செய்தி அளித்துள்ளது.
குறிப்பாக, கீழ்நிலைப் பணியாளர்களை நிறுத்தாமல், ப்ராஜெக்டுகளை கையாளும் மேனேஜர்கள் மற்றும் மத்திய நிலையில் உள்ள பணியாளர்களை நீக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதிலும் குறிப்பாக, ஈமெயில் மேனேஜெர்கள் எனப்படும், ப்ராஜெக்டுகளை கையாளும் பணியாளர்களை, நீக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனை உற்று நோக்கும் போது, அத்தகையப் பணிகள் அனைத்துமே ஏற்கனவே, ஆட்டோமேஷனுக்கு சென்று விட்டதால், இந்தப் பணிகளை மட்டுமே தூக்குவதற்கு வாய்ப்புகள் உள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர்.
ஏற்கனவே பல கோடி இந்தியாவில் வேலை இல்லாமல், அரசாங்க வேலைக்கு மோதிக் கொண்டு இருக்கின்றனர். இந்நிலையில், இவர்களைப் போன்று வேலையில் இருப்பவர்களும் வேலையிழந்தால், இந்தியாவின் பொருளாதாரம் கேள்விக்குறியாகும் என்பதில், எவ்வித ஐயமுமில்லை.
source:linkedin.com