கடந்த மாதம் 7,000 பேரை பணயில் இருந்து நீக்க இருப்பதாக சிடிஎஸ் நிறுவனம் அறிவித்தது. இந்நிலையில், அதற்குப் பதிலாக சுமார் 23,000 மாணவர்களை, புதிதாக பணிக்குத் தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
வரும் 2020ம் ஆண்டு, படித்து முடித்து வேலைக்குச் செல்ல தயாராகும் மாணவர்களில் சுமார் 23,000 பேரினை வேலைக்கு எடுக்க உள்ளதாம் சிடிஎஸ். தன்னுடைய அலுவலகங்களில் பல்வேறு மட்டங்களில் வேலை பார்த்த உயரதிகாரிகளை பணியில் இருந்து நீக்கி வரும் சிடிஎஸ், அவர்கள் இருந்த இடத்தில் மற்றவர்களை அமர்த்திவிட்டு, புதிய காலிப் பணியிடங்களுக்கு இவர்களைத் தேர்ந்தெடுக்க உள்ளதாம்.
மேலும், இந்தியாவின் 80 பொறியியல் கல்வி நிறுவனங்களில் இருந்து, சுமார் 15,000 மாணவர்களை தேர்தெடுத்து உள்ளதாகவும் அந்நிறுவனத்தின் சிடிஎஸ் நிறுவனத்தின் இந்திய இயக்குநர் திரு. எம்டி ராம்குமார் ராமமூர்த்தி தெரிவித்துள்ளார். இதனால், கண்டிப்பாக, இந்த முறை அதாவது 2020ம் வேலைக்கு அதிக மாணவர்களை சிடிஎஸ் தேர்ந்தெடுக்க உள்ளதால், இறுதி ஆண்டுப் படிக்கின்ற மாணவர்களுக்கு நல்ல வாய்ப்பாக இது அமைய உள்ளது.