உலகின் மீது அக்கறைக் காட்டும் க்யூபா! வல்லரசுகள் இவர்களிடம் கற்றுக் கொள்ள வேண்டும்!

31 March 2020 அரசியல்
cubandoctors.jpg

இத்தாலியில் தற்பொழுது கொரோனா வைரஸால் ஏற்பட்டுள்ள பாதிப்பானது, நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. அவர்களுக்கு உதவும் வகையில், க்யூபா அரசாங்கமானது, தன்னுடைய மருத்துவர்களை சிகிச்சைக்கு அனுப்பி வைத்துள்ளது.

க்யூபா அரசாங்கமானது, இன்டர்பெர்ரான் ஆல்பா 2பி என்ற மருந்தினைப் பயன்படுத்தி பல ஆயிரம் மக்களின் உயிரினைக் காபாற்றி வருகின்றது. இந்த மருந்தின் காரணமாக, கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு இருந்தவர்கள் குணமாகி உள்ளனர். இந்த மருந்தானது, ஜனவரி 25ம் தேதியில் இருந்தே தயாரிக்கப்பட்டு வருகின்றது. இந்த மருந்தால், 1500க்கும் அதிகமான கொரோனா வைரஸ் நோயாளிகள் குணமாகி உள்ளனர்.

சீனாவின் சுகாதாரம் மற்றும் மருத்துவ அமைப்புப் பரிந்துரைத்த 30 மருந்துகளில், இந்த மருந்தும் ஒன்று. இந்த மருந்தினை 1986ம் ஆண்டு, Centre for Genetic Engineering and Biotechnology (CIGB) என்ற க்யூபாவின் அமைப்பானது, இந்த மருந்தினைக் கண்டுபிடித்துள்ளது. இந்த மருந்தானது, ஹெச்ஐவி எய்ட்ஸ் உள்ளிட்ட பல நோய்களுக்கு பயன்படுத்தப்பட்டு வருகின்றது. மேலும், ஹெப்படைட்டிஸ் பி, சி, டெங்கு, கேன்சர் உள்ளிட்ட நோய்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்த மருந்தானது, தென் கொரியாவிலும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. இந்த மருந்தினால் தான், தென் கொரியாவில் ஏற்பட்ட இறப்பு விகிதம் குறைந்துள்ளது. இந்த மருந்தின் மகத்துவத்தினை அறிந்தப் பல நாடுகள், தற்பொழுது இந்த மருந்தினை வாங்க ஆர்வம் காட்டி வருகின்றன.

உலக நாடுகள் பலவும், தாங்கள் கண்டுபிடிக்கும் மருந்துகளைப் பயன்படுத்தி லாபம் ஈட்டுவதனையே குறிக்கோளாக கொண்டு செயல்படுகின்றன. இந்நிலையில், பிடல் கேஷ்ட்ரோவின் மண்ணானது, தன்னலமற்று இவ்வாறு பொதுமக்களுக்கு செயலாற்றுவது பாராட்டபட்டு வருகினது.

HOT NEWS