முகப்பொலிவுக்கு வெள்ளரிக்காய்

28 June 2019 உடல்நலம்
cucumbefacemask.jpg

வெள்ளரிக்காய் பொதுவாக வெயில் காலங்களில் அதிகளவில் கிடைக்கும் உணவுப் பொருள் என்றாலும் சாதாரணமாக அனைத்து இடங்களிலும், அனைத்துக் காலங்களிலும் கிடைக்கிறது. இதன் விலை மிகக் குறைவு மட்டுமின்றி மிக நல்ல உணவுப் பொருளும் கூட. இதனைக் காயாகவும், பழமாகவும் உண்ணலாம். பழுத்த வெள்ளரியை சர்க்கரையுடன் சேர்த்து உண்ணும் பொழுது மிகவும் சுவையாக இருக்கும்.

வெள்ளரியில் அதிகளவில் நீர்ச்சத்து உள்ளதால் இதனை நாம் அதிகம் உண்ண வேண்டும். இது முகம் வெயிலால் வறண்டு விடாமல் இருக்க உதவுகிறது. வெள்ளரியை வட்டமாக வெட்டி கண்களில் வைக்கும் பொழுது உடல் சூடு குறையும்.

கண்கள் புத்துணர்ச்சி அடையும். வெள்ளரிச் சாற்றை முகத்தில் பூசி அரை மணி நேரம் ஊற வைத்துக் கழுவும் பொழுது முகம் புத்துணர்ச்சி அடையும். இதில் இயற்கையாகவே உள்ள குளிர்ச்சியால் உடல் சூடு மிக விரைவாகக் குறையும். எனவே, இதன் சாற்றைக் குடிப்பது மிக நல்லது.

வெள்ளரிச்சாற்றடன் தக்காளிச் சாற்றைக் கலந்து முகத்தில் பூசி வந்தால் முகப் பருக்கள் விரைவாக மறையும். மேலம், இதில் கொழுப்பு இல்லை எனவே இதனை அதிகளவில் எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் எடைக் கூடாமல் நம்மல் பார்த்துக்கொள்ள முடியும். இதில் உள்ள நீர்ச்சத்துக் காரணமாக நம் உடல் விரைவாக சோர்வடையாது.

இதனை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் சிறுநீரகக் கற்கள் வராமல் தடுக்க இயலும்.

எனவே, வெள்ளரிக்காயை அதிகளவில் எடுத்துக்கொள்வது உடலுக்கு மிக நன்மைப் அளிக்கக்கூடிய விஷயம் ஆகும்.

HOT NEWS