தில்லுக்கு துட்டு-2, ஏ-1 படத்தின் வெற்றிகளைத் தொடர்ந்து, சந்தானம் நடித்து வெளியாகி இருக்கும் திரைப்படம் டக்கால்டி. அந்த இரண்டு படங்களும், ஹிட்டாக முக்கியக் காரணமாக இருந்தவை, படத்தின் பாடல்களும், காமெடியுமே. அவை இரண்டுமே, இந்தப் படத்தில் இல்லை எனக் கூறலாம். அப்படித் தான் இந்தப் படம் வெளியாகி உள்ளது.
பெரிய அளவில் காமெடி இல்லை. ரசிக்கும் படியான பாடல்களும் இல்லை. இதனாலயே, இந்தப் படம் வெளிவந்து இருப்பது பலருக்கும் தெரியாது. இந்தப் படத்தில், ரவுடி ராதாரவியின் கூட்டத்தில் இருக்கும் நபராக, சந்தானமும், யோகிபாபுவும் இருக்கின்றனர். இரண்டு பேர் இருந்தாலும், காமெடி என்பது இல்லை. ஒரு பெண்ணைக் கண்டுபிடிக்க ராதாரவி சந்தானைத்தை சொல்கின்றார். அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்தாரா இல்லையா, அந்தப் பெண்ணை எதற்காக அழைத்து வரச் சொல்கின்றார் என படம் செல்கின்றது.
சந்தானம் அந்தப் பெண்ணைக் கண்டுபிடித்த பின், என்ன நடக்கின்றது, கதாநாயகனும், நாயகியும் இணைந்தார்களா இல்லையா என்பது தான் படத்தின் மீதிக் கதை. சுத்தமாகப் பழையக் கதை. இடமும், நடிகர்களுமே புதுமை. யோகி பாபுவும், சந்தானமும் இருந்தும், படத்தில் காமெடி இல்லாமல் இருப்பது தான், இந்தப் படத்தின் மாபெரும் பலவீனமே. படத்தில், ஊறுகாய் அளவிற்கு கூட, லாஜிக் கிடையாது. காமெடியும் கிடையாது.
இதில் என்னத்த சொல்ல. பாடல்கள் கேட்கவும் முடியல, பார்க்கவும் முடியல. வீட்டில், டிவியில் இந்தப் படத்தினை விரைவில் பார்க்கும் வாய்ப்புகள் அதிகம் உள்ளன. ஏனெனில், இந்தப் படத்தினை விரைவிலேயே டிவியில் போட்டுவிடுவார்கள்.
மொத்தத்தில் டக்கால்டி தேவையில்லாத ஒன்று.