40 ஆண்டுகளாக, சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் பாக்ஸ் ஆபிஸ் மன்னனாக இருந்து வருகின்றார். அவர் நடித்துள்ள தர்பார் திரைப்படம் கடந்த 9ம் தேதி அன்று உலகம் முழுவதும் சுமார், 7000 திரையறங்குகளில் வெளியானது. இந்தப் படத்தினை லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
படம் நல்ல வரவேற்பினைப் பெற்ற நிலையில், படம் வெளியான சில மணி நேரங்களிலேயே, வாட்ஸ் ஆப்பிலும், தமிழ் ராக்கர்ஸ் இணையதளத்திலும், லீக்கானது. இதனால், காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது. இருப்பினும், படம் நன்றாக இருப்பதாக கூறி வரும் ரசிகர்கள், படத்தினை திரையறங்கிற்குச் சென்று பார்த்து வருகின்றனர்.
இந்தத் திரைப்படம், முதல் நாளில் மட்டும் 32 கோடி ரூபாய் வசூல் செய்துள்ளதாகவும், அடுத்த நாள் 30 கோடி ரூபாயும், ஞாயிற்றுக் கிழமை (12-01-2020) 32 கோடியும் வசூல் செய்துள்ளதாக ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர். இதனால், இந்தத் திரைப்படம் வெளியாகி நான்காவது நாளான 13-01-2020 அன்று 150 கோடி ரூபாய் வசூலினை கடந்துள்ளது. நாற்பது ஆண்டுகளாக சினிமாவில் நடித்து வரும், 70 வயதுடைய ரஜினிகாந்த் இன்னும் பாக்ஸ் ஆபிஸ் விஷயத்தில், தொடர்ந்து முதலிடத்தில் இருப்பது, அவருடைய ரஜினியிசத்தின் வெற்றியாகவே பார்க்கப்படுகின்றது.