சூப்பர் ஸ்டாருடன் மோதும் விஜய்? பொங்கலுக்கு போட்டி!

15 June 2019 சினிமா
darbar.jpg

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தர்பார். இத்திரைப்படம் முதலில் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாவதாக முடிவு செய்யப்பட்டது. பின்னர், விஜயின் தளபதி 63வது திரைப்படம் வெளியாக உள்ளதாக ஏற்கனவே அறிவித்து இருந்தனர்.

இதன் காரணமாக, தர்பார் திரைப்படம் வரும் 2020ம் ஆண்டு ஜனவரி பொங்கலுக்கு வெளியாவதாக படக்குழுவினர் அறிவித்தனர். தற்பொழுது, தர்பார் படத்தின் சூட்டிங் மும்முரமாக சென்று கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில், தளபதி விஜய் நடிக்க உள்ள, பெயரிடப்படாத தளபதி 64 திரைப்படமும் பொங்கலுக்கு வெளியாக வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

HOT NEWS