DARK WEB எனும் மாய வலை

02 July 2019 தொழில்நுட்பம்
deepweb.jpg

இதுவே "DEEP WEB"–ன் தந்தை என்று கூறலாம். இதனைச் சாதாரணமாகப் பயன்படுத்தவோ (அ) உள் நுழையவோ இயலாது. இந்த வசதியின் காரணமாகவே ஹேக்கர்கள் இதனைப் பயன்படுத்துகின்றனர். இதன் மூலமாகவே, பைரஸி எனப்படும் திருட்டு விசிடிக்கள், ஆயுத விற்பனைத் தகவல்கள், உடல் உறுப்புகள் விற்பனைப் போன்றவை நடைபெறுகிறது. இதனை இரண்டு வகைகளாகப் பிரிக்கலாம்.

PEER TO PEER இணைப்பு:-

இம்முறையின் மூலம் நாம் குறிப்பிட்ட ஒருவருடன் வர்த்தகத் தொடர்பு, இணையப் பணப் பரிமாற்றம் மற்றும் பல செயல்களை மிக இரகசியமாக யாராலும் கண்டுபிடிக்க இயலாத வகையில் செய்ய இயலும்.

PRIVACY இணைப்பு:-

இதன் மூலம் "மாயவலையை" தொடர்பு கொண்டு அனைவருடனும் தொடர்பை ஏற்படுத்த இயலும். இவ்வாறு செய்வதன் மூலம், பலக் குழுக்களுடன் இணைந்துப் பணியாற்ற இயலும். அதே சமயம், மிகவும் பாதுகாப்பானது என்பதால், எந்த அரசாங்க நிறுவனத்தாலும் நம்மைக் கண்டுபிடிக்க இயலாது. DARK WEB–யை சாதாரண BROWSER அல்லது இணைப்பின் மூலமே பயன்படுத்த இயலாது. TOR எனப்படும் செயலியைக் கொண்டு மட்டுமே பயன்படுத்த முடியும்.

ஒரு சில சட்ட விரோத செயல்களை அரசுகளே செய்வதால், இந்த "மாயவலையை" அழிப்பது என்பது, நடக்கக் கூடிய விஷயம் அல்ல. இவைகளை நாம் "டிஜிட்டல்" உலகிற்கு முழுவதும் மாறுவதற்கு முன்பே தடுக்காவிடால், இணையக் குற்றங்கள் சாதாரண விஷயங்கள் ஆகி விடும் என்பதே உண்மை.

இவைகளைப் பயன்படுத்தக் கூடாது என்று அறிவுறுத்தப்படுகிறது.

HOT NEWS